விருத்தாசலம்; நெற்பயிரில் மஞ்சள் கரிப்பூட்டை அல்லது நெற்பழ நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளார்.விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம், பயிர் நோயியல்துறை விஞ்ஞானி மருதாச்சலம் ஆகியோரது செய்திக்குறிப்பு:மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில், சில இடங்களில் மஞ்சள் கரிப்பூட்டை அல்லது நெற்பழ நோய் தாக்குதல் இருப்பது தெரியவந்துள்ளது.நோய் தாக்குதலைத் தவிர்க்க, நல்ல தரமான நோயற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும். தேவைக்கு அதிகமாக தழைச்சத்து இடக்கூடாது. விதைக்கும் முன் ஒரு கிலோ விதைக்கு கார்பண்டசிம் 2 கிராம் அல்லது லிட்டர் என்ற அளவில் 5 - 6 மணி நேரம் ஊற வைத்து (ஈர விதை நேர்த்தி) நாற்றங்காலில் இடவேண்டும்.நடவு வயலில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 50 டபிள்யு.பி., (2.5 கிராம் / ஒரு லிட்டர்) அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு 77 டபிள்யு.பி., (2.5 கிராம்/ லிட்டர்) அல்லது புரோபிகோனசோல் (1.0 மி.லி., / லிட்டர்) போன்ற பூசணக் கொல்லிகளை பூட்டை பருவத்தில் ஒரு முறையும், 50 சதவீதம் பூக்கும் தருணத்தில் இரண்டாவது முறையும் தெளிப்பதால் கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE