பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீருடன் பாதாள சாக்கடை நீர் கலப்பு

Added : ஜன 12, 2021
Share
Advertisement
சின்னமனுார் : குடிநீருடன் பாதாள சாக்கடை நீர் கலந்து விநியோகம் ஆகி வருகிறது என மக்கள் புகார் கூறியும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.சின்னமனுார் மெயின்ரோட்டில் சாக்கடை கட்டுமான பணிகள் ஒரு மாதமாக நடந்து வருகிறது. பத்ரகாளி அம்பாள் வீதிக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் சேதமடைந்தது. இப்பகுதிமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் குழாய்களை

சின்னமனுார் : குடிநீருடன் பாதாள சாக்கடை நீர் கலந்து விநியோகம் ஆகி வருகிறது என மக்கள் புகார் கூறியும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.

சின்னமனுார் மெயின்ரோட்டில் சாக்கடை கட்டுமான பணிகள் ஒரு மாதமாக நடந்து வருகிறது. பத்ரகாளி அம்பாள் வீதிக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் சேதமடைந்தது. இப்பகுதிமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் குழாய்களை சீரமைத்து தர கோரினர். தலா ரூ. 7,200 வழங்கினால் தான் சீரமைக்கு முடியும் என்று கூறி பணிகளை கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் இந்த வீதியில் வசிப்பவர்கள் தாங்களே பணம் செலவழித்து குழாய் இணைப்பு கொடுத்து வருகின்றனர்.தோண்டிய பள்ளத்தில் பாதாள சாக்கடை குழாய் சேதமடைந்துள்ளதால் பாதாள சாக்கடை கழிவுநீரும், குடிநீரும் கலந்து விநியோகம் செய்யப்படுவதாக மக்கள் புகார் கூறியுள்ளனர். பள்ளம் தோண்டி ஒரு மாதமாக மூடப்படாததால் குப்பைகளும் பள்ளத்தில் விழுந்து அசுத்தப்படுத்தப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X