கம்பம், : கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் அய்யம்பட்டி, பல்லவராயன்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. பல்லவராயன்பட்டியில் ஜனவரியிலும் அய்யம்பட்டியில் பிப்ரவரியிலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்ட நிபந்தனைகள் கடுமயைாக உள்ளது. மாடுகளுடன் இரண்டு பேர்கள் மட்டுமே வரவேண்டும். ஜல்லிக்கட்டை பார்க்க 300 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
மாடுபிடி வீரர்கள், மாடுகளுடன் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தமுடியுமா என்பது தெரியவில்லை என்று மாடுபிடி வீரர்கள் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE