வைகை ஆற்றில் நீர் வரத்து ஏற்படும் காலத்தில் கரையோர கிராமங்களான அணைக்கரைப்பட்டி, மூணாண்டிபட்டி, தர்மத்துப்பட்டி, புதுார், புள்ளிமான்கோம்பை ஆகிய கிராமங்களில் நிலத்தடி நீர் உயர்வு ஏற்படும். இக்கிராமங்களில் நெல், வாழை, காய்கறிகள் சாகுபடி ஆண்டு முழுவதும் தொடர்கிறது.
இந்த ஆண்டு வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் நீர் திறக்கப்பட்டது. இதனால் கரையோர கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இறவை பாசனம் முழுவீச்சில் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக வறட்சியான ஆண்டிபட்டி பகுதியில் அடுத்தடுத்து பெய்த மழையால் புதுார், புள்ளிமான்கோம்பை, தர்மத்துப்பட்டி பகுதி சிற்றோடைகளில் நீர் வரத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இப்பகுதி விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் தரை தளம் வரை உயர்ந்துள்ளது.
நிலத்தடிநீர் மட்டம் உயர்வால் இப்பகுதியில் கோடை சாகுபடியும் சிறப்பாக அமையும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.அணை நீர் மட்டம் உயர்வுமாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் நேற்று வைகை அணை நீர் மட்டம் 61.25 அடி. (அணையின் மொத்த உயரம் 71 அடி) அணையின் நீர் இருப்பு 3847 மி.கனஅடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 1091 -----கன அடியாகவும், வினாடிக்கு 469 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE