கடலுார்; அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி, ஒன்றிய தலைவருடன் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கடலுார் ஊராட்சி ஒன்றிய கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் பக்கிரி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அய்யனார், பி.டி.ஓ.,க்கள் கிருஷ்ணமூர்த்தி, சங்கர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான கவுன்சிலர்கள் விவாதம்:ஞானசவுந்தரி: சேடப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பெரியகரைக்காட்டில் சமுதாய நலக்கூடம், சிப்காட் தொழிற்சாலைகளில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.தமிழழகி: கோண்டூர், வெளிச்செம்மண்டலத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும்.ராகவேந்திராநகர், வெங்கடாஜலபதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும்.அப்போது மற்ற கவுன்சிலர்களும், தங்கள் பகுதியில் இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை என தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.பின்னர் தலைவர் பக்கிரி, அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE