திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்தேக்கம் மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகளில் ஒன்றாகும். தற்போது, மொத்த கொள்ளளவான 2,580 மில்லியன் கன அடியில் (29.72 அடி) 1,920 மில்லியன் கன அடி (27.20 அடி) உள்ளது.இந்நீர் தேக்கத்திலிருந்து, நேற்று காலை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் சம்பத் தண்ணீரை திறந்து வைத்தார்.வினாடிக்கு 130 கன அடி நீர் வீதம் திறந்து விடப்பட்டது. 110 நாட்கள் தண்ணீர் திறந்து விட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் 24,059 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.நிகழ்ச்சியில், கலெக்டர் சந்திரசேகர சகாமுரி, முன்னாள் எம்.எல்.ஏ., தமிழழகன், பொதுப்பணித்துறை, வருவாய் துறை, வேளாண் துறை அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து அமைச்சர் சம்பத் நிருபர்களிடம் கூறுகையில், 'விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.வெலிங்டன் ஏரி மாவட்டத்தின் மிகப்பெரிய சொத்து. நீர்வரத்தை மேம்படுத்துவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.விவசாயிகள் அதிருப்தி...வெலிங்டன் நீர்தேக்கத்தின் பிரதான வாய்க்கால் முழுதும் கருவேல மரங்கள் வளர்ந்து துார்ந்துள்ளன. மேலும், ஆவினங்குடி, கூடலுார் உட்பட பல கிராமங்களில் பாசன வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில் நீர்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்திருப்பது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE