பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளிக்கு செல்லும் தனியார் பள்ளி மாணவர்கள்: பாண்டியன் எம்.எல்.ஏ., பெருமிதம்

Added : ஜன 12, 2021
Share
Advertisement
சிதம்பரம்; 'தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளியை நோக்கிச் செல்லும் நிலையில் அரசு பள்ளிகள் செயல்படுகிறது' என எம்.எல்.ஏ., பேசினார்.சிதம்பரத்தில் 1,741 பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, மாவட்டக் கல்வி அலுவலர் மோகன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், டி.எஸ்.பி., லாமேக், மாவட்ட

சிதம்பரம்; 'தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளியை நோக்கிச் செல்லும் நிலையில் அரசு பள்ளிகள் செயல்படுகிறது' என எம்.எல்.ஏ., பேசினார்.

சிதம்பரத்தில் 1,741 பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, மாவட்டக் கல்வி அலுவலர் மோகன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், டி.எஸ்.பி., லாமேக், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் திருமாறன், நகர கூட்டுறவு வங்கித் தலைவர் குமார், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், சண்முகம் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் கலைவாணி வரவேற்றார்.சுந்தர், பன்னீர்செல்வம், சுரேஷ்பாபு, சுந்தரமூர்த்தி, சாமிநாதன், ராஜா, மருதவாணன், வேணு புவனேஸ்வரன், பீமாராவ் உட்பட பலர் பங்கேற்றனர்.விழாவில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் மற்றும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தேர்வான மருத்துவ மாணவிகள் தர்ஷினி, இலக்கியா ஆகியோருக்கு தனது சொந்த பணத்தில் தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கி கவுரவித்தார்.பின்னர் அவர் பேசுகையில், 'முன்னாள் முதல்வர் அறிவித்த திட்டங்களை தற்போதைய முதல்வர் செயல்படுத்தி வருகிறார். அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவர் கனவு நனவாகியுள்ளது.தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்க்கும் நிலை உருவாகியுள்ளது. அந்த அளவிற்கு அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளது' என்றார்.தாண்டவராயசோழகன் பேட்டை தலைமை ஆசிரியர் ரவி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X