செம்பட்டி : திண்டுக்கல், வத்தலக்குண்டில் இருந்து இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களில் வழித்தட அறிவிப்பு இல்லாததால் பயணிகள் குழப்பமடைகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து கன்னிவாடி, செம்பட்டி, சின்னாளபட்டி, கொடைரோடிற்கு அரசு டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான பஸ்களில் வழித்தடம், எண் போன்ற அறிவிப்புகள் இல்லை. செம்பட்டி, கொடைரோடு வழியே இயங்கும் வத்தலக்குண்டு கிளையின் பஸ்களிலும் இதே பிரச்னை நீடிக்கிறது. இவற்றில் பெரும்பாலும் மாற்று வழித்தட பஸ்கள் இயக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட பஸ் ஊழியர்களும், காத்திருக்கும் பயணிகளுக்கு பதிலளிப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர்.பயணிகள் குழப்பத்தை தவிர்க்க அறிவிப்பு பலகைகளுடன் பஸ்களை இயக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE