பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...

Added : ஜன 12, 2021
Share
Advertisement
தெருக்குளில் ஓடுது கழிவு நீர்வத்தலக்குண்டு: மேலக்கோவில்பட்டியில் சாக்கடை வசதி இல்லாததால் கழிவு நீர் தெருக்களில் ஓடுகிறது. தற்போது மழைக்காலமாக இருப்பதால் சேறும், சகதியுமாக உள்ளது. கிராமங்களில் டெங்கு அபாயம் உள்ளதால் கழிவு நீர் தேங்காமல் இருக்க இத்தெருக்களில் சிமெண்ட் தளம் அமைக்க வேண்டும் என்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பல முறை நாடியும் பலனில்லை. எனவே,

தெருக்குளில் ஓடுது கழிவு நீர்

வத்தலக்குண்டு: மேலக்கோவில்பட்டியில் சாக்கடை வசதி இல்லாததால் கழிவு நீர் தெருக்களில் ஓடுகிறது. தற்போது மழைக்காலமாக இருப்பதால் சேறும், சகதியுமாக உள்ளது. கிராமங்களில் டெங்கு அபாயம் உள்ளதால் கழிவு நீர் தேங்காமல் இருக்க இத்தெருக்களில் சிமெண்ட் தளம் அமைக்க வேண்டும் என்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பல முறை நாடியும் பலனில்லை. எனவே, மேலக்கோயில்பட்டி ஆதிதிராவிடர் காலணியில் சாக்கடையுடன் கூடிய சிமெண்ட் தளம் அமைக்க வேண்டும்.

நீதிமன்றத்தில் பொங்கல் விழா

வேடசந்துார்: உரிமையியல் மற்றும் சார்பு நீதிமன்றத்தில் பொங்கல் விளையாட்டுவிழா நடந்தது. வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். செயலாளர்பாலமுருகன் முன்னிலை வகித்தார். நீதிபதிகள் முருகானந்தினி, செல்வநாயகி விளையாட்டுபோட்டியை துவக்கி வைத்தனர். இருபாலருக்கும் தனித்தனியே சோடா பாட்டிலில் நீர்நிறப்புதல், பானை உடைத்தல் போட்டிகள் நடந்தது. வழக்கறிஞர்கள் கணேசன், ரவிசங்கர், ராஜத்தினம் பங்கேற்றனர்.

நம்பிக்கையில்லா தீர்மானம்

வத்தலக்குண்டு: நடகோட்டை ஊராட்சியில் 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். துணை தலைவராக கீதா உள்ளார். இவர் பதவி ஏற்றதிலிருந்து பிரச்னை இருந்தது. ஊராட்சியில் வளர்ச்சி பணிகளும் முடங்கின. ஒவ்வொரு ஊராட்சி கூட்டமும் பிரச்னைகளுடன் முடிந்தது. நேற்று நடந்த ஊராட்சி கூட்டத்தில் துணை தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 6 பேர் கையொப்பமிட்டனர். தீர்மான நகலை, பி.டி.ஓ., குணவதியிடம் ஊராட்சி உறுப்பினர்கள் வழங்கினர்.

மலைப்பகுதியில் கனமழை

தாண்டிக்குடி: கொடைக்கானல், தாண்டிக்குடியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கடந்த வாரம் முதல் சாரல் மழை பெய்தது. நேற்று மாலையில் இருந்து பலத்த சூறைக்காற்றுடன் கீழ்மலை, மேல்மலை பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. மழையால் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது. வத்தலக்குண்டு ரோட்டில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது.

ஆசிரியர் சங்கத்தினர் மனு

பழநி: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம், தேசிய ஆசிரியர் சங்க தலைவர் திரிலோகசந்திரன், பொதுச்செயலாளர் கந்தசாமி மனு அளித்தனர். அதில், 'பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்களை, பட்டதாரி ஆசிரியராக பணி புரியும் இடத்திலேயே பதவி உயர்வு அளிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதியக்குழு முரண்பாடுகள் களைய வேண்டும்'என, கூறியிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X