பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சித்தலைவர் கலெக்டரிடம் மனு

Added : ஜன 12, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமியிடம் ஜம்புதுரைகோட்டை ஊராட்சி தலைவர் பவுன்தாய் மனு அளித்தார்.அதில் கூறியிருப்பது: நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், துணைத் தலைவராக உள்ள சிவராமன், தான் தான் ஊராட்சி தலைவர் என்று கூறிக்கொண்டு ஊராட்சி அலுவலகத்தில் தலைவரின் இருக்கையை விட உயரமான நாற்காலியில் அமர்கிறார். தன்னைக் கேட்காமல் எந்த வேலையும்

திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமியிடம் ஜம்புதுரைகோட்டை ஊராட்சி தலைவர் பவுன்தாய் மனு அளித்தார்.

அதில் கூறியிருப்பது: நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், துணைத் தலைவராக உள்ள சிவராமன், தான் தான் ஊராட்சி தலைவர் என்று கூறிக்கொண்டு ஊராட்சி அலுவலகத்தில் தலைவரின் இருக்கையை விட உயரமான நாற்காலியில் அமர்கிறார். தன்னைக் கேட்காமல் எந்த வேலையும் செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அவரை மீறி செய்யும் பணிகளை தடுத்து நிறுத்தி இடையூறு செய்கிறார். அம்மையநாயக்கனூர் போலீசில் புகார் அளித்தால் இருவரும் சமாதானம் செய்து கொள்ளுங்கள் என்கின்றனர். மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஊராட்சி தலைவர்களை அவமானப்படுத்தும் நிலை தொடர்கிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X