பொது செய்தி

தமிழ்நாடு

மயில்களை மிரட்டும் 'பறவை விரட்டி'

Added : ஜன 12, 2021
Share
Advertisement
வேடசந்துார் : வேடசந்துார் பகுதியில் சத்தம் எழுப்பும் சோலார் 'பறவை விரட்டி'யை பயன்படுத்தி மயில்களை விவசாயிகள் விரட்டி வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய பறவைகளான மயில் பரவலாக காணப்படுகிறது. பழநி, ஒட்டன்சத்திரம், வேடசந்துார் பகுதியில் பூச்சிகள், தானியங்களை உட்கொள்ள அடிக்கடி விளைநிலங்களுக்கு படையெடுக்கின்றன. இரை தேடி வரும் மயில்கள் அங்கேயே தன்

வேடசந்துார் : வேடசந்துார் பகுதியில் சத்தம் எழுப்பும் சோலார் 'பறவை விரட்டி'யை பயன்படுத்தி மயில்களை விவசாயிகள் விரட்டி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய பறவைகளான மயில் பரவலாக காணப்படுகிறது. பழநி, ஒட்டன்சத்திரம், வேடசந்துார் பகுதியில் பூச்சிகள், தானியங்களை உட்கொள்ள அடிக்கடி விளைநிலங்களுக்கு படையெடுக்கின்றன. இரை தேடி வரும் மயில்கள் அங்கேயே தன் இருப்பிடமாக மாற்றிக் கொண்டு வயல்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன.

மயில்களை என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.இந்நிலையில் மயில், கிளி உள்ளிட்ட பறவைகளை விரட்ட, சத்தம் எழுப்பும் சோலார் 'பறவை விரட்டி' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இக்கருவியை வயல்களில் வைத்தால், அதில் இருந்து எழும் சத்தத்தை கேட்டு பறவைகள் தெறித்து ஓடும்.இதனை, தற்போது வேடசந்துார் விவசாயிகள் பயன்படுத்தி மயில்களை விரட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X