மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள மேலநெட்டூரில் மினி கிளினிக் அமைக்கப்படும் என்று கூறி தற்போது வேறு ஊரில் மினிகிளினிக் திறக்கப்பட உள்ளதால் கிராம மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
மருத்துவ வசதி இல்லாத கிராமங்களில் 2000 மினிகிளினிக்குகள் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் மேலநெட்டூரில் மினிகிளினிக் அமைக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்த நிலையில் மேலநெட்டூரில் திறப்பதாக இருந்த மினிகிளினிக்கை மிளகனுார் ஊராட்சிக்கு மாற்றியுள்ளனர்.
இதற்கு மேலநெட்டூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அரசியல் தலையீடு மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளின் குளறுபடியே காரணம் என மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் புகார் கொடுத்துள்ளனர்.இது குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் யசோதாமணியிடம் கேட்ட போது,வட்டார மருத்துவ அலவலர்கள் தான் ஆய்வுக்கு சென்றனர். அங்கு மினி கிளினிக் அமைக்க முடிவு செய்யவில்லை,அடுத்த கட்டமாக அங்கு மினிகிளினிக் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE