பொது செய்தி

தமிழ்நாடு

கனமழையால் நெற்பயிர்கள் பாதிப்புஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம்

Added : ஜன 12, 2021
Share
Advertisement
சிவகங்கை : கனமழை காரணமாக விளைந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் பேரிடர் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு முழுமையாக இழப்பீடு வழங்க வேண்டும், என விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் 2.5 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளனர்.குறுகிய கால

சிவகங்கை : கனமழை காரணமாக விளைந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் பேரிடர் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு முழுமையாக இழப்பீடு வழங்க வேண்டும், என விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் 2.5 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளனர்.குறுகிய கால நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு வந்துள்ள நிலையில் தற்போது கனமழை பெய்ததால் வயல்களில் பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி முளைத்து வருகிறது. அறுவடை செய்த நெல் ஈரம் காரணமாக பூசானம் பிடித்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் பேரிடர் கால நிவாரணமாக வழங்க வேண்டும்.

பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு முழுமையாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் மனுவழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தெரிவித்ததாவது: சிவகங்கை மாவட்டத்தில் நெற்பயிர்கள் அறுவடைக்கு வந்த நிலையில் மழை பெய்து வருவதால், நெற்கதிர்கள் அறுவடை செய்ய முடியவில்லை. வயல்களில் தேங்கிய நீரால் மீண்டும் முளைக்க ஆரம்பித்துவிட்டது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X