பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் பாதிப்பு கணக்கெடுக்க உயர்மட்ட குழு அமைக்க கோரிக்கை

Added : ஜன 12, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கையில் கனமழை காரணமாக பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்த அரசு உயர் மட்ட குழுஅமைக்க வேண்டும், என தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர். தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் ஆபிரகாம், அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்புக்குழு பொது செயலாளர் ஆதிமூலம், மாவட்டத்தலைவர் ராமலிங்கம் கலெக்டர்

சிவகங்கை : சிவகங்கையில் கனமழை காரணமாக பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்த அரசு உயர் மட்ட குழுஅமைக்க வேண்டும், என தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் ஆபிரகாம், அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்புக்குழு பொது செயலாளர் ஆதிமூலம், மாவட்டத்தலைவர் ராமலிங்கம் கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் மனு கொடுத்தனர். அதில் தெரிவித்திருப்பதாவது: சிவகங்கை மாவட்டத்தில் சம்பா பருவத்தில் நெல், மிளகாய் சாகுபடி 2 லட்சம் ஏக்கருக்கும் மேல் பயிர் செய்யப்பட்டிருந்தது.

காளையார்கோவில், இளையான்குடி, சிங்கம்புணரி, திருப்புவனம் தாலுகாக்களில் மிளகாய் சாகுபடியும், சிவகங்கை, கல்லல், காரைக்குடி, சாக்கோட்டை, தேவகோட்டை, திருப்புத்துார், சிங்கம்புணரி பகுதியில்நெல் விதைப்பு முறையிலும், நடவு முறையிலும் பயிர் செய்யப்பட்டிருந்தது. கனமழை காரணமாக மிளகாய் பயிர் அழுகியும், நெற்பயிர்கள் முளைத்தும் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் பயிர் பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அரசு உயர் மட்ட குழு அமைத்து பயிர்கள் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி, விவசாயிகள் விடுபடாமல் உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X