சிவகங்கை : ''புரெவி, நிவர் புயல் மழையால் சிவகங்கையில் பாதித்த 2.10 லட்சம் ஏக்கர் நெற்பயிருக்கு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து இழப்பீடு வழங்க வேண்டும்,'' என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.முருகன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாவட்டத்தில் 2.80 லட்சம் ஏக்கர் நன்செய் நிலங்கள் உள்ளன. அனைத்து தாலுகாவிலும் உள்ள 521 வருவாய் கிராமங்களின் கீழ் 2.10 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். இந்த ஆண்டு நிவர், புரெவி புயல் மழையால் மழை நீர் விளை நிலங்களில் தேங்கியுள்ளன. தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால், முளைத்து விட்டன. இந்த பாதிப்பு மாவட்ட அளவில் அனைத்து பகுதி விவசாய நிலங்களிலும் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இதற்கென ஆய்வு குழுவை ஏற்படுத்தி, மாவட்ட அளவில் நடவு செய்த 2.10 லட்சம் ஏக்கர் நெல் வயல்களை பார்வையிட்டு பாதிப்பிற்கு உள்ளான நெல்வயல்களின் விவசாயிகளுக்கு பேரிடர் கால நிவாரண நிதியில் இருந்து, காலதாமதமின்றி இழப்பீடு வழங்க வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE