சிவகங்கை : 16 ஆண்டுகளுக்குப்பின் 360 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியூர் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது.
மணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.மதுரை அழகர்கோயில் மலையில் பெய்யும் மழை நீர் பெருக்கெடுத்து காட்டாற்று வெள்ளமாக சிவகங்கை மாவட்ட எல்கையான எருமைப்பட்டி அருகே பிராமணப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்பணை நிறைந்தது. இங்கிருந்து வெளியேறும் வெள்ளம் ஏரியூர் பகுதியில் 360 ஏக்கரில் உள்ள கண்மாய் நிறைந்து மறுகால் பாய்ந்து வருகிறது. இந்த நீர் மணிமுத்தாறு பகுதியில் வெள்ளப்பெருக்காக செல்கிறது.
பெரியாறு கால்வாய் நீரும் இணைந்து தேவகோட்டைப்பகுதிக்கு செல்கிறது. 2005 ம் ஆண்டுக்குப்பின் தற்போது தான் மணிமுத்தாறு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முன்னாள் கலெக்டர் ஜெயகாந்தன் மணிமுத்தாறு பகுதியில் 48 கி.மீ.,துாரத்திற்கு சீமைகருவேல மரங்களை அகற்றினார். இதன் காரணமாக வந்த வெள்ளப்பெருக்கு ஏரியூர் கண்மாயையும் நிறைத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE