திருக்கோஷ்டியூர் : திருக்கோஷ்டியூர் அருகே சிவகங்கை ரோட்டில் கட்டுப்பாட்டை இழந்த வேன் கண்மாயில் கவிழ்ந்ததில் பெண் இறந்தார். 9 பேர் காயமடைந்தனர்.
ராமநாதபுரம் கீழக்கரை அருகே களிமாங்குண்டை ச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்டவர்கள் பழநிக்கு சுவாமி தரிசனத்திற்காக சென்றனர். செல்லும் வழியில் பிள்ளையார்பட்டிக்கு செல்ல திருப்புத்துார் வந்த போது, நேற்று மதியம் 3:30 மணிக்கு கட்டுப்பாட்டை இழந்த வேன் ஜமீன்தார்பட்டி அருகில் உள்ள கண்மாயில் கவிழ்ந்தது.அதில் மணி மனைவி ஆறுமுகம்65, இறந்தார். மேலும் 9 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE