ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.
மிளகாய் பயிரிட்ட நிலங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.ஆர்.எஸ்.மங்கலம், புல்லமடை, ராமநாதமடை, வல்லமடை, ஆர்.வி.வாகை, செங்குடி, சீனாங்குடி, வண்டல், வரவணி, சேத்திடல், எட்டியதிடல், பூலாங்குடி உட்பட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.மிளகாய் செடியில் காய்கள் காய்த்து வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் பெய்த மழைக்கு பெரும்பாலான மிளகாய் நடவு செய்த நிலங்களில் மிளகாய் செடிகள் மழைநீரில் மூழ்கி அழிந்தன.
எஞ்சிய மிளகாய் செடிகளுடன், மிளகாய் கன்றுகளை மீண்டும் நடவு செய்து, விவசாயிகள் பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் சில நாட்களாக இப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், மீண்டும் மிளகாய் வயல்களில் தண்ணீர் தேங்கி வருகிறது. மிளகாய் விவசாயத்தை பொருத்தவரை லேசான ஈரப்பதத்திலும், வறட்சியிலும் மகசூல் கொடுக்க கூடிய தோட்டக்கலை பயிர் என்பதால், தொடர் மழைக்கு மிளகாய் செடிகள் தாக்குபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE