சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தரைபாலத்தில் மழை நீர்: 20 கிராம மக்கள் பாதிப்பு

Added : ஜன 12, 2021
Share
Advertisement
திருவாடானை : திருவாடானையில்இருந்து சூச்சனி செல்லும் வழியில் தரைப்பாலம் உள்ளது. இதன் மீது தண்ணீர் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளத.அஞ்சுகோட்டை கண்மாயிலிருந்து கலுங்கு வழியாக வெளியேறும் உபரி நீர் குளக்காலில் கட்டப்பட்ட தரைப்பாலம் வழியாக செல்கிறது. கடந்த சில நாட்களாக பலத்த மழையால் தண்ணீர் பெருக்கெடுத்து தரைப்பாலத்திற்கு மேல் செல்வதால் மக்கள்

திருவாடானை : திருவாடானையில்இருந்து சூச்சனி செல்லும் வழியில் தரைப்பாலம் உள்ளது. இதன் மீது தண்ணீர் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளத.அஞ்சுகோட்டை கண்மாயிலிருந்து கலுங்கு வழியாக வெளியேறும் உபரி நீர் குளக்காலில் கட்டப்பட்ட தரைப்பாலம் வழியாக செல்கிறது.

கடந்த சில நாட்களாக பலத்த மழையால் தண்ணீர் பெருக்கெடுத்து தரைப்பாலத்திற்கு மேல் செல்வதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.சூச்சனி மகாலிங்கம் கூறியதாவது:சூச்சனி, தோட்டாமங்கலம், திருவடிமதியூர், கோனேரிகோட்டை, கிழவண்டி உள்ளிட்ட 20 கிராம மக்கள் இப் பாலம் வழியாக செல்வார்கள்.பஸ் வசதியில்லாததால் வீட்டிற்கு தேவையான பொருட்களை தலைச்சுமையாக சுமந்துசெல்வது வழக்கம்.தரைப்பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்வதால் சிரமமாக உள்ளது. மழை தொடர்ந்து பெய்வதால் பாலம் துண்டிக்க வாய்ப்புள்ளது. ஆகவே பாலத்தை உயர்த்தி கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X