பொது செய்தி

தமிழ்நாடு

'வாட்ஸ் ஆப் குழு துவங்கி கண்காணியுங்கள்'

Added : ஜன 12, 2021
Share
Advertisement
திருவள்ளூர் - ''கிராம கண்காணிப்பு குழுவினருடன், 'வாட்ஸ் ஆப்' குழு உருவாக்கி, கண்காணிக்க வேண்டும்,'' என, காவல் துறையினருக்கு, எஸ்.பி., அறிவுரை வழங்கினார்.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில், குடும்ப வழக்கு, சிறு சச்சரவு உள்ளிட்ட வழக்குகளை, புகார் நிலையிலேயே கண்டறிந்து, தீர்வு காணும் வகையில், 'கிராம கண்காணிப்பு குழு' துவக்கப்பட்டு உள்ளது.இதன் அறிமுக

திருவள்ளூர் - ''கிராம கண்காணிப்பு குழுவினருடன், 'வாட்ஸ் ஆப்' குழு உருவாக்கி, கண்காணிக்க வேண்டும்,'' என, காவல் துறையினருக்கு, எஸ்.பி., அறிவுரை வழங்கினார்.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில், குடும்ப வழக்கு, சிறு சச்சரவு உள்ளிட்ட வழக்குகளை, புகார் நிலையிலேயே கண்டறிந்து, தீர்வு காணும் வகையில், 'கிராம கண்காணிப்பு குழு' துவக்கப்பட்டு உள்ளது.இதன் அறிமுக கூட்டம், பாண்டூர் ஊராட்சியில், அதன் தலைவர் பிரபு, ஒன்றிய கவுன்சிலர் சுலோசனா மோகன்ராவ் முன்னிலையில் நடந்தது.எஸ்.பி., அரவிந்தன் தலைமை வகித்து குழுவை துவக்கி வைத்துப் பேசினார். தொடர்ந்து, கிராம கண்காணிப்பு அலுவலர்களான காவல் துறையினர் பங்கேற்ற விழிப்புணர்வு கூட்டம், திருவள்ளூரில் நடந்தது.எஸ்.பி., அரவிந்தன் பேசுகையில், 'அனைவரும், கிராமங்களுக்கு தினமும் செல்ல வேண்டும். ஊராட்சி தலைவர், உதவியாளர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை ஒருங்கிணைத்து, 'வாட்ஸ் ஆப்' குழு உருவாக்க வேண்டும். அதன் மூலம், சிறு சிறு பிரச்னை குறித்த தகவல்களை பெற்று, வழக்கு பதியாமல், சுமுகமாக தீர்வு காண வேண்டும்' என்றார்.நிகழ்ச்சியில், ஏ.டி.எஸ்.பி.,க்கள் மீனாட்சி, ஜெயகுமார், டி.எஸ்.பி., துரைபாண்டியன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.1,389 கிராமங்கள்திருவள்ளூர் காவல் மாவட்டத்தில், 607 தாய் கிராமம், 782 குக்கிராமம் என, மொத்தம், 1,389 கிராமங்களில், கிராம கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.தங்கள் பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத செயல், சிறுசிறு பிரச்னை உள்ளிட்டவற்றை, சம்பந்தப்பட்ட கிராம கண்காணிப்பு குழு காவலரிடம் தெரிவிக்கலாம்.உடனடியாக அக்குழுவினர் நடவடிக்கை எடுப்பர். கிராம கண்காணிப்பு குழு காவலருக்கு தெரிவிக்கப்படும் புகார் அனைத்தும், பதிவு செய்யப்பட்டு உயர் அதிகாரிகளால் கண்காணிக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X