* படம் மட்டும் திருத்தணி மாவட்ட கல்வி அலுவலகம்,  அரசு பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

* படம் மட்டும் திருத்தணி மாவட்ட கல்வி அலுவலகம்,  அரசு பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா 

Added : ஜன 12, 2021
Share
திருத்தணி - மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் அரசு பள்ளிகளில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா, வரும், 13ம் தேதி முதல் மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில், 13ம் தேதி போகியும், 14 ம் தேதி பொங்கல் விழாவும், 15 ம் தேதி மாட்டுப்பொங்கல் விழா நடக்கிறது.இந்நிலையில், நேற்று திருத்தணி அரசினர் ஆண்கள் மேனிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி

திருத்தணி - மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் அரசு பள்ளிகளில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா, வரும், 13ம் தேதி முதல் மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இதில், 13ம் தேதி போகியும், 14 ம் தேதி பொங்கல் விழாவும், 15 ம் தேதி மாட்டுப்பொங்கல் விழா நடக்கிறது.இந்நிலையில், நேற்று திருத்தணி அரசினர் ஆண்கள் மேனிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் திருத்தணி மாவட்ட கல்வி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.விழாவை ஓட்டி, அலுவலகம் முன் புதுபானையில் பொங்கல் வைத்து சூர்யபகவானுக்கு படைத்து வழிப்பட்டனர். இதில், மாவட்ட கல்வி அலுவலர் முனிசுப்பராயன், மாவட்ட ஆய்வாளர் வெங்கடேசுலு உள்பட அலுவலக ஊழியர்கள் பங்கேற்று வழிப்பட்டனர்.

இதே போல், திருத்தணி அரசினர் மகளிர் மேனிலைப் பள்ளியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுரேஷ், தலைமை ஆசிரியர் டி.தெமினா கிரோனப் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக் கொண்டு புதுப்பானையில் பொங்கல் வைத்தும் செங்கரும்பு வைத்தும் சூர்ய பகவானை வழிப்பட்டனர்.இதே போல் திருத்தணி ஒன்றியத்தில் பல அரசு பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.••••••••

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X