சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜாமினில் வந்தவர் கஞ்சா விற்றதால் கைது

Added : ஜன 12, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : பரமக்குடியில் நன்னடத்தை ஜாமின் பத்திர காலத்தில் வெளியே வந்தவர் மீண்டும் கஞ்சா விற்றதால் கைது செய்யப்பட்டார். பரமக்குடி எமனேஸ்வரம் கிறிஸ்தவ தெருவை சேர்ந்தவர் குட்டி (எ) ரஞ்சித்குமார் 30. இவர் மீது 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2020 பிப்.,19ல் பரமக்குடி நிர்வாகத்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஓராண்டு காலம் எந்த குற்ற செயல்களிலும் ஈடுபட மாட்டேன்,' என்று நன்னடத்தை

ராமநாதபுரம் : பரமக்குடியில் நன்னடத்தை ஜாமின் பத்திர காலத்தில் வெளியே வந்தவர் மீண்டும் கஞ்சா விற்றதால் கைது செய்யப்பட்டார்.

பரமக்குடி எமனேஸ்வரம் கிறிஸ்தவ தெருவை சேர்ந்தவர் குட்டி (எ) ரஞ்சித்குமார் 30. இவர் மீது 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2020 பிப்.,19ல் பரமக்குடி நிர்வாகத்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஓராண்டு காலம் எந்த குற்ற செயல்களிலும் ஈடுபட மாட்டேன்,' என்று நன்னடத்தை ஜாமின் பெற்றார்.அதை மீறி 2020 நவ.,29ல் கஞ்சா விற்ற போது பரமக்குடி நகர் போலீசார் கைது செய்தனர்.

நன்னடத்தை பிணையத்தை மீறி ஓராண்டு காலத்திற்குள் மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதால் ஜாமின் காலம் முடியும் வரை நீதிமன்ற தடுப்பு காவலில் அடைக்க பரமக்குடி நிர்வாகத்துறை நடுவர் நேற்று உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X