மப்பேடு - மப்பேடு பகுதியில், விவசாயம் செய்து வரும் விளை நிலங்களில் இரை தேடி கொக்குகள் உலா வருகின்றன.கடம்பத்துார் ஒன்றியப் பகுதிகளில், விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. தற்போது, நவரைப் பருவத்தில், மப்பேடு, புதுமாவிலங்கை, கொண்டஞ்சேரி, கூவம் உட்பட பல பகுதிகளில், நவரைப் பருவத்தில், 7,000 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரை விவசாயம் செய்ய இலக்கு நிர்ணயித்து, நெல் பயிரிட்டு வருவதாக வேளாண் துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.விவசாயிகள் நெல் பயிரை ஆர்வமாக பயிரிட்டு வருகின்றனர். இதில், மப்பேடு பகுதியில் நெல் பயிரிடுவதற்காக விவசாயிகள் நீர் பாய்ச்சி, இயந்திரம் மூலம் உழுது தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகினறனர்.இதனால், நிலத்தின் அடியில் இருக்கும் ஏராளமான பூச்சி இனங்கள், நிலத்தில் மேற்பகுதிக்கு வருகின்றன. இவ்வாறு, நடவு செய்ய தயாராகும் விளைநிலங்களில் உள்ள பூச்சிகளை உணவாக உட்கொள்ள, வெள்ளை நிற கொக்குகள் கூட்டமாக இறங்கி இரை தேடி உண்டு வருகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE