முதுகுளத்துார் : மானாமதுரையில் நீதிமன்றம் எதிரில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேர் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதுத்தெருவை சேர்ந்தவர் மைனர் மணி (எ) அருள்நாதன் 27. உடைகுளம் வினோத்கண்ணன் 28. நண்பர்களான இருவர் மீதும் பல வழக்குகள் உள்ளன. ஜன.9 இரவு 8:00 மணிக்கு மானாமதுரை நீதிமன்றம் எதிரில் உள்ள கடையில் இருந்த போது, டூவீலர்களில் வந்த நபர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். இதில் அருள்நாதன் இறந்தார். வினோத் கண்ணன் ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மானாமதுரை போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர்.இந்த கொலை தொடர்பாக மதுரை காமராஜபுரத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் மிதுன் மாணிக்கம் 21, மானாமதுரை தெற்கு ரதவீதி தேசிகன் மகன் வசந்த் சரண் 22, திருப்பாச்சேத்தி மருதுபாண்டியர் தெரு முனியாண்டி மகன் ராஜகுமார் 22, மானாமதுரை செக்கடி தெரு பூமிநாதன் மகன் சங்கர் 19, ஆகிய நான்கு பேர் முதுகுளத்துார் குற்றவியல் நடுவர் மன்றத்தில் நேற்று காலை சரண் அடைந்தனர்.இக் கொலை தொடர்பாக போலீசார் கூறியதாவது: மானாமதுரையைச் சேர்ந்த மைனர் மணி (எ) அருண்நாதன், வினோத்கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் தீபாவளிக்கு முதல் நாள் மானாமதுரை அருகே நவத்தாவு பகுதி டாஸ்மாக் கடை அருகே மது குடித்து கொண்டிருந்த போது மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்த மிதுன் மாணிக்கம் அவரது நண்பர்களோடு மது குடித்த போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் மிதுன் மாணிக்கத்திற்கு மண்டை உடைந்தது. மேலும் அதற்கடுத்த நாள் சிவகங்கையில் இருந்து மிதுன் மாணிக்கம் மானாமதுரைக்கு டூவிலரில் வந்த போது எதிரே வந்த வினோத்கண்ணன் அவரை வழிமறித்து வாளால் வெட்ட முயன்ற போது தப்பினார்.இதனால் ஆத்திரமடைந்த மிதுன் மாணிக்கம் ஜன.9ல் தனது நண்பர்களோடு சென்று அருண்நாதன்,வினோத்கண்ணன் ஆகிய இருவரையும் வெட்டியதில் அருண்நாதன் பலியானார், வினோத்கண்ணன் காயமடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் மிதுன்மாணிக்கம் 21, மானாமதுரை செல்லமுத்து நகர் வசந்தசரண்22, திருப்பாச்சேத்தி ராஜ்குமார் 22, மானாமதுரை செக்கடி தெருசங்கர்(எ)குட்டை சங்கர்19,ஆகியோர் முதுகுளத்துார் ஜே.எம்.,கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர்.மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 3க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரித்து வருகிறோம், என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE