பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் நிலம் ரூ.6 கோடிக்கு விற்பனை?

Added : ஜன 12, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் - காஞ்சிபுரம், ஒலிமுகமது பேட்டையில், தாந்தோணி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, 6 ஆறு கோடி ரூபாய்க்கு, நிர்வாகிகள் விற்பனை செய்ததாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து, மாவட்ட கலெக்டரிடம், ஒலிமுகமதுபேட்டை பகுதியை சேர்ந்த சிவா என்பவர் அளித்த மனு விபரம்பொதுமக்களுக்கு சொந்தமான தாந்தோணி அம்மன் கோவில், 100 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த

காஞ்சிபுரம் - காஞ்சிபுரம், ஒலிமுகமது பேட்டையில், தாந்தோணி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, 6 ஆறு கோடி ரூபாய்க்கு, நிர்வாகிகள் விற்பனை செய்ததாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து, மாவட்ட கலெக்டரிடம், ஒலிமுகமதுபேட்டை பகுதியை சேர்ந்த சிவா என்பவர் அளித்த மனு விபரம்பொதுமக்களுக்கு சொந்தமான தாந்தோணி அம்மன் கோவில், 100 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த கோவிலுக்கு சொந்தமான, 4.66 ஏக்கர் நிலம், தாமரைத்தாங்கல் பகுதியில் உள்ளது.இதை குத்தகைக்கு விட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில், கோவில் பராமரிப்புக்கு செலவு செய்யப்படுகிறது.இந்நிலையில், ஒரு சமூகத்தைச் சேர்ந்த, 15 பேர், கோவில் பெயரில் டிரஸ்ட் ஆரம்பித்து, கோவில், அந்த சமூகத்திற்கு சொந்தமானது என, பதிவு செய்துள்ளனர்.மேலும், கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, 6 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்திருக்கின்றனர்.அனைவருக்குமான கோவிலை, ஒரு சமூகத்திற்கானது என மாற்றி, மோசடியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X