பொது செய்தி

தமிழ்நாடு

'குட்டீஸ்' செயலுக்கு குவியும் பாராட்டுகள்

Updated : ஜன 12, 2021 | Added : ஜன 12, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
தாம்பரம் - மழையின்போது திறந்து கிடந்த கால்வாயை மூடி, சமூக பொறுப்புடன் செயல்பட்ட, குழந்தைகளுக்கு, பல்வேறு தரப்பில் இருந்தும்,பாராட்டுகள் குவிந்து வருகின்றன.வளர்ந்து வரும் நவீன உலகில், சமூக பொறுப்பு, ஒவ்வொருவருக்கும் அவசியமானது. பொறுப்புடனும், கடமை உணர்வுடனும் நடந்து கொள்வதன் வாயிலாக, நம் சமூகம் சிறப்புடன் அமைய, நாம் ஒவ்வொருவரும் காரணமாகிறோம்.ஆனாலும், சமூக பொறுப்பு
 'குட்டீஸ்' செயலுக்கு குவியும் பாராட்டுகள்

தாம்பரம் - மழையின்போது திறந்து கிடந்த கால்வாயை மூடி, சமூக பொறுப்புடன் செயல்பட்ட, குழந்தைகளுக்கு, பல்வேறு தரப்பில் இருந்தும்,பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

வளர்ந்து வரும் நவீன உலகில், சமூக பொறுப்பு, ஒவ்வொருவருக்கும் அவசியமானது. பொறுப்புடனும், கடமை உணர்வுடனும் நடந்து கொள்வதன் வாயிலாக, நம் சமூகம் சிறப்புடன் அமைய, நாம் ஒவ்வொருவரும் காரணமாகிறோம்.ஆனாலும், சமூக பொறுப்பு நம்மில் பலருக்கும் இல்லை என்பதே நிதர்சனம்.இதை மாற்றும் வகையிலும், ஏட்டளவில் உள்ள, சமூக பொறுப்பு சிந்தனையை, நிஜமாக்கும் வகையிலும் செயல்பட்டுள்ளனர், தாம்பரம் அடுத்த முடிச்சூர், லட்சுமிபுரத்தைச் சேர்ந்த, அசோக்குமார் - கிருஷ்ணவேணி தம்பதியின் குழந்தைகள், தேவயானி, 11 மற்றும் விக்னேஷ், 8.

இம்மாதம், 8ம் தேதி மாலை மழை பெய்த நிலையில், கடைக்கு சென்று, வீடு திரும்பிய குழந்தைகள் இருவரும், சாலையோரம் கழிவு நீர் செல்லும், மழை நீர் கால்வாய் திறந்து கிடப்பதை கண்டுள்ளனர்.அதில், யாரும் விழுந்து விடக் கூடாது என்பதற்காக, தேவயானி அங்கிருந்த, விளம்பர பதாகை கட்ட பயன்படும், 'ஆங்கிளை' எடுத்து, கால்வாய் மீது வைத்து, அதன் மீது, பலகை ஒன்றை வைத்து மூடினார். கால்வாய் மூடும் பணியை, அக்கா செய்து கொண்டிருக்க, அவர், மழையில் நனையாதபடி, விக்னேஷ் குடை பிடித்தது, சமூக பொறுப்புடன், சகோதர பாசத்தையும் வெளிப்படுத்தியது.இதை, அவ்வழியே சென்ற, பொது மக்கள் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதையடுத்து, குழந்தைகளை, முடிச்சூர் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பினர், பாராட்டி சான்றிதழ் வழங்கினர். இக்குழந்தைகளின் செயல், பொறுப்பற்ற அதிகாரிகளுக்கும், நம்மை சுற்றியுள்ள சமூகத்தினருக்கும், பாடம் புகட்டும் வகையில் உள்ளது.

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி! சாக்கடையை மூடிய சிறுமிக்கு டிஜிபி பாராட்டு

இந்நிலையில், தீயணைப்பு துறை, டி.ஜி.பி., சைலேந்திர பாபுவும் நேற்று, குழந்தைகளையும் பெற்றோரையும், நேரில் அழைத்து பாராட்டினார்.அப்போது, பரிசு பொருட்கள், 2,000 ரூபாய் வெகுமதி வழங்கிய அவர், குழந்தைகளின் கல்விக்கு எதிர்காலத்தில், உதவி தேவைப்பட்டால், தன்னை அழைக்குமாறு கூறி, மொபைல் போன் எண்ணையும் வழங்கி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivakumar - london,யுனைடெட் கிங்டம்
16-ஜன-202116:45:57 IST Report Abuse
sivakumar நல்ல குழந்தைகள் . கேடுகட்ட அரசியல்வாதிகள் ஒழுங்காக இருந்தால் இந்த மாதிரி நிலைமை தேவையில்லை . ஊழல் அரசியல்வாதிகளால் தான் இந்தியாவின் நிலைமை இப்படி இருக்கிறது. இனி வரும் இளைய சமுதாயம் ஊழல் இல்லாத நாட்டை உருவாக்குவார்களாக.
Rate this:
Cancel
Govendha raja C - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜன-202110:31:51 IST Report Abuse
Govendha raja C இளைய சமுதாயம்... இனிய சமுதாயம்... இனி வரும் காலங்களில்... இனிய வெற்றிகளைக் குவித்திட... இனிய வாழ்த்துக்கள்...
Rate this:
Cancel
Naga rajan - singapore,சிங்கப்பூர்
13-ஜன-202107:25:19 IST Report Abuse
Naga rajan வாழ்த்துக்கள் குட்டீஸ் .....தொடரட்டும் உங்கள் பயணம் . வாழ்க வளமுடன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X