விழிப்புணர்வு அதிகரிப்பால், வேளச்சேரி பகுதியில் சில வீட்டு உரிமையாளர்கள், குப்பையை தரம் பிரித்து வழங்குகின்றனர்.
அவர்களை கவுரவிக்க, புதிய நிறுவனம் முடிவு செய்துள்ளது.அடையாறு மண்டலத்தில், அக்டோபர் முதல், குப்பை கையாளும் பணியை ‛உர்பசர்சுமித்' என்ற ஒப்பந்த நிறுவனம் செய்கிறது. இந்த நிறுவனத்திற்கு, செயல்திறன் அளவீட்டு முறையில், குப்பையை தரம் பிரித்து கையாள உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.ஆனால், மண்டல மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால், பெரும்பாலானோர் தரம் பிரித்து வாங்குவதில்லை. மக்கும், மக்காத குப்பையுடன், பாட்டில், அபாயகரமான மின்சாதன குப்பை என, மொத்த குப்பையும் கலந்து கொடுக்கின்றனர்.ஒரு சில, அடுக்குமாடி குடியிருப்புகளில், அங்கே குப்பையை தரம் பிரித்து உரம் தயாரிக்கப்படுகிறது. முந்தைய ஒப்பந்த நிறுவனம் எப்படி குப்பை கையாண்டதோ, அதேபோன்ற மனநிலையுடன் மக்கள் குப்பை கொடுக்கின்றனர்.புதிய நிறுவனம், வீதி நாடகம், துண்டு பிரசுரம் மற்றும் ஒலி பெருக்கி வழியாக விழிப்புணர்வு வழங்குகின்றனர். இதனால், வேளச்சேரியில் சில வீட்டு உரிமையாளர்கள், அவர்களாகவே சிறிய தொட்டி வாங்கி, குப்பையை முறையாக தரம் பிரித்து வழங்குகின்றனர்.இவர்களை கவுரவிக்க, உர்பசர்சுமித் நிறுவனம் முடிவு செய்துள்ளது.குப்பையை தரம் பிரித்து கையாள தேவையான ஊழியர்கள், தொட்டிகள், வாகனங்கள் உள்ளன. போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தினால், பொதுமக்கள் குப்பையை தரம் பிரித்து வழங்குவர். அதற்கான, சூழலை உருவாக்கி வருகிறோம். வீதிநாடகம், நலச்சங்கங்கள் மத்தியில் கூட்டம் போன்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில், நல்ல பலன் கிடைத்துள்ளது. பொதுமக்களில் சிலர், 150 ரூபாய் செலவு செய்து, பச்சை, நீலம் வண்ணத்தில், இரு தொட்டிகள் வாங்கி வைத்துள்ளனர்.உர்பசர்சுமித் அதிகாரிகள்குப்பை சேகரிப்பு விவரம்மண்டலம் அடையாறுவார்டுகள் 13தெருக்கள் 2,020குப்பை எடை 530 டன்தொட்டிகள் 2,226பேட்டரி வாகனங்கள் 510ஒரு வாகனத்தில் 8 சிறிய தொட்டிகள்காம்பெக்ட் லாரிகள் 24மரக்கழிவுகள் அகற்றும் லாரிகள் 2மண் உறிஞ்சும் நவீன லாரிகள் 6துாய்மை பணி தினமும் மூன்று ‛சிப்ட்'துாய்மை ஊழியர்கள் எண்ணிக்கை 700
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE