சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, டி.வி.எஸ்., நிறுவனம், 'முதல் காதல்' என்ற தமிழ் பெயரில் கண்ணை கவரும், 'ஸ்கூட்டி பெப் பிளஸ்' வாகனத்தை, அறிமுகம் செய்துள்ளது.நாட்டில், இருசக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியில், டி.வி.எஸ்., நிறுவனம் முன்னணியில் உள்ளது.இந்நிறுவன வாகனத்தை, பெரும்பாலான பெண்கள் தேர்வு செய்வர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'முதல் காதல்' என்ற, 'ஸ்கூட்டி பெப் பிளஸ்' வாகனம், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த வாகனத்தின் விலை, 56 ஆயிரத்து, 85 ரூபாய். கண்ணை கவரும் வர்ணத்துடன், 'கிராபிக்ஸ்' மற்றும் முதல் முறையாக, டி.வி.எஸ்., சின்னம் தமிழில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.தமிழக மக்களின் ரசனைக்கு ஏற்ப, வாகனம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 4 கிலோ வாட் சக்தியும், 6.5 என்.எம்., முறுக்கு விசையுடன் உருவாக்கப்பட்டு உள்ளது. இதோடு, 15 சதவீத மைலேஜ் அதிகமாக வழங்குகிறது.மேலும், கரடு முரடான சாலைகளில், எளிதாக பயணிக்க முடியும். உற்சாகமாக, ஓட்டும் அனுபவத்தை கொடுக்கும். மிகச்சிறந்த, 'கிரவுண்ட் ரிச்சாபிலிட்டி மற்றும் டெலெஸ்கோபிக் சஸ்பென்ஷன்' போன்ற அம்சங்கள் வாகனத்தில் உள்ளன.வாகனத்தின், மைய ஸ்டான்ட் பயன்படுத்துவதில் இருக்கும் சிரமத்தை போக்க, டி.வி.எஸ்., நிறுவனம் காப்புரிமை பெற்ற, 'ஈசி ஸ்டான்ட்' தொழில்நுட்பத்துடன் வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளதால், பயன்படுத்துவதில் ஏற்படும் சிரமம், 30 சதவீத குறையும்.இந்த வாகனம் தொடர்பான விபரங்களுக்கு, சுரபி உதாஸ் Surabhi.udas@tvsmotor.com மற்றும் பிரியங்கா பட்டாச்சார்யா Priyanka.b@tvsmotor.com என்ற இ- - மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE