பொது செய்தி

இந்தியா

எரிசக்தி சேமிப்பு: ரயில்வேக்கு 13 விருதுகள்

Added : ஜன 12, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி : தேசிய எரிசக்தி சேமிப்பில் ரயில்வே துறை 13 விருதுகளை வென்றுள்ளது.தேசிய எரிசக்தி சேமிப்பில் கடந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் மூன்று பிரிவுகளில் 13 விருதுகளை ரயில்வே துறை பெற்றுள்ளது.துாய்மை மற்றும் பசுமை மிகுந்த போக்குவரத்திற்கான முயற்சிகளை ரயில்வே தொடர்ந்து மேற்கொள்கிறது. இதனால் போக்குவரத்து பிரிவில் மேற்கு ரயில்வே முதல்
Indian Railways, railway, Energy Conservation Award, award, ரயில்வே

புதுடில்லி : தேசிய எரிசக்தி சேமிப்பில் ரயில்வே துறை 13 விருதுகளை வென்றுள்ளது.

தேசிய எரிசக்தி சேமிப்பில் கடந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் மூன்று பிரிவுகளில் 13 விருதுகளை ரயில்வே துறை பெற்றுள்ளது.


latest tamil newsதுாய்மை மற்றும் பசுமை மிகுந்த போக்குவரத்திற்கான முயற்சிகளை ரயில்வே தொடர்ந்து மேற்கொள்கிறது. இதனால் போக்குவரத்து பிரிவில் மேற்கு ரயில்வே முதல் பரிசையும், கிழக்கு ரயில்வே இரண்டாம் பரிசையும் பெற்றுள்ளன. இந்த பிரிவில் வடகிழக்கு ரயில்வே மற்றும் தென் மத்திய ரயில்வே பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANTONYRAJ - MADURAI,இந்தியா
12-ஜன-202113:06:24 IST Report Abuse
ANTONYRAJ தேசிய எரிசக்தி சேமிப்பில் ரயில்வே துறை 13 விருதுகளை வென்றுள்ளது.இது மட்டுமல்ல நம் இரயில்வே துறை மிக முக்கியமான சாதனை ஒன்றை சத்தமில்லாமல் சாதித்திருக்கிறது. அதுதான் நம் பிரதமர் சில நாட்களுக்கு முன் நாட்டுக்கு அர்பணித்த கனரக சரக்கு போக்குவரத்து ரயில்.இந்த சாதனையைப் பற்றி தினமலரைத் தவிர வேறு எந்த ஊடகமும் வாயைத் திறக்க வில்லை.உலகெங்கும் உள்ளதைப் போல இது சாதாரணமான சரக்கு போக்குவரத்து ரயில் தடம் அல்ல. வழக்கமாக உள்ள தடத்தில் சரக்கு ரயிலில் 40அடி நீளமுள்ள கண்டெய்னரை வரிசையாக உள்ள ஓபன் ட்ரக்கில் ஒன்றின் பின் ஒன்றாக வைத்து அதிக பட்சம் 350 கண்டெய்னர்களை ஏற்றி மணிக்கு 60 கிமீ வேகத்தில் செல்லலாம்.இந்தியாவிலும் இதுதான் வழக்கத்திலிருந்தது.இது மற்ற ரயில்கள் செல்லும் தடத்திலும் உயரத்தில் உள்ள மின்சார ஒயர்களிலும் உரசிக் கொண்டு இயங்கும்.ஆனால் இந்த பிரத்யேக ரயிலில் 40அடி கண்டெய்னர்களை ஒன்றின் மேல் ஒன்றென இரண்டாக அடுக்கி வைத்து அதிகபட்சமாக 750 லிருந்து 800 கண்டெய்னகள் வரை ஏற்றி செல்ல முடியும். அப்படியென்றால் அதனுடைய எடை மற்றும் உயரம் இருமடங்காகும்.இதற்காகத்தான் தனியான உறுதியாக்கப்பட்ட ரயில் தடமும்,உயரம் இருமடங்கு அதிகரிக்கப்பட்ட உரசிக் கொண்டு செல்லும் மின்சார கம்பங்களும், உயரம் கூட்டப்பட்ட அதிகமான வழியில் உள்ள பாலங்களும் அமைக்கப் பட்டது.இந்த ரயில் மணிக்கு நூறு கி.மீ வேகத்தில் செல்லும் என்பது இதன் தனிச் சிறப்பு. உலகிலேயே இப்படிப் பட்ட இரண்டடுக்கு சரக்கு ரயில்களை இப்போது நாம் இந்தியாவில் மட்டுமே தயாரித்து அதை செயல்படுத்தியிருக்கிறோம் என்பதில் நாம் பெருமை கொள்வோம்.
Rate this:
Cancel
12-ஜன-202112:55:49 IST Report Abuse
தமிழ் ரிப்பேர் ஆன பேருந்துகளை ரோட்டில் மக்கள் தள்ளுவதுபோல் ரயில்களை பயணியர் தள்ளிவிடச் சொன்னால் இன்னும் சுற்றுப்புற சூழல் பாதிக்காமல் இருக்குமே.இன்னும் பல அவார்டு கொடுக்கலாமே.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
12-ஜன-202110:29:27 IST Report Abuse
A.George Alphonse சுமார் ஒருவருடம் ஓடாமல் இருந்தால் எல்லாமே சேமிப்பே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X