பொது செய்தி

தமிழ்நாடு

காயத்ரி: திறம்படப் பாடக்கூடிய இசைக் கலைஞர்

Added : ஜன 12, 2021
Share
Advertisement
கச்சேரியை இப்படித்தான் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக, தன் கச்சேரியை வகுத்திருந்தார் காயத்ரி. இன்றைய இளம் கலைஞர்களில் திறம்படப் பாடக்கூடியவர்களின் வரிசையில் முந்தியிருப்பவர்களில் ஒருவர். சரியான உச்சரிப்பு, அதிக ஆரவாரமில்லாத பாட்டு. 'பெடரேஷன் ஆப் சிட்டி சபாஸ்' சார்பில் நடந்த கச்சேரியில், மும்மூர்த்திகளின் கீர்த்தனைகள், தமிழ்ப் பாடல்கள்,

கச்சேரியை இப்படித்தான் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக, தன் கச்சேரியை வகுத்திருந்தார் காயத்ரி.

இன்றைய இளம் கலைஞர்களில் திறம்படப் பாடக்கூடியவர்களின் வரிசையில் முந்தியிருப்பவர்களில் ஒருவர். சரியான உச்சரிப்பு, அதிக ஆரவாரமில்லாத பாட்டு. 'பெடரேஷன் ஆப் சிட்டி சபாஸ்' சார்பில் நடந்த கச்சேரியில், மும்மூர்த்திகளின் கீர்த்தனைகள், தமிழ்ப் பாடல்கள், ராகமாலிகை என, அழகான கலவையாகத் தேர்ந்தெடுத்து இவர் வழங்கியது பாராட்டுக்குரியது.கச்சேரியின் முக்கிய அம்சமாக அமைந்தது, 'சங்கராபரண' ராகத்தில், தீக் ஷிதர் கிருதியும், 'மாஞ்சி' ராகத்தில் சியாமா சாஸ்திரியின் கீர்த்தனையும். கம்பீரமான சங்கராபரண ராக ஆலாபனையை, அளவோடு பாடி தீக் ஷிதரின், 'ஸ்ரீ தக் ஷிணாமூர்த்தே' என்ற கீர்த்தனையை விரிவாகப் பாடினார். 'ஜம்ப' தாளத்தில் உள்ள பாடலின் நீண்ட வரிகளைப் பொருள் தெரிந்து பாடிய விதமும், 'சுககர ப்ரவ்ருத்தே' என்ற மத்யம காலத்தில் அமைத்த நெரவலும், அந்த வரியில் அக்ஞான நிவ்ருத்தே என்று பிரித்துப் பாடிய திறமையும் கீர்த்தனைக்கு அழகு சேர்த்தன. மெயினாக எடுத்துக் கொண்டதற்கேற்ப, விரிவாக ஸ்வரக் கற்பனைகளை, இரண்டரை ஸ்தாயிகளிலும் சிரமமின்றி சஞ்சாரம் செய்ய விட்டார். வயலினில் ஹேமலதாவும், ஆலாபனையிலும், நெரவல் மற்றும் கற்பனை ஸ்வரங்களிலும், 'சரிநிகர்' என்று நிரூபிக்கும்படி வாசித்திருந்தார்.கச்சேரியின் துவக்கத்தில் எடுத்துக்கொண்டதும் ஒரு தீக் ஷிதர் கிருதியே. 'சாமரத்தில்' உள்ள சித்தி விநாயகம்

.இதிலும் மத்யம கால வரிகளான, 'ப்ரஸித்த கணநாயகம்' என்ற வரியில் விரிவான, விரைவான ஸ்வரங்களை அமைத்துப் பாடி, கச்சேரிக்கு அஸ்திவாரத்தை அமைத்துக் கொண்டார். தொடர்ந்து சிறிய அழகான தமிழ்ப் பாடல். பாபநாசம் சிவனின் வரமுவில் அமைந்த துணைபுரிந்தருள். ஒரே ஒரு ஸ்வரத்தில் ஹிந்தோள ராகத்திலிருந்து மாறுபட்ட இந்த ராகத்தின் ஆலாபனையை, வெகு நேர்த்தியாகக் கையாண்டார். 'பதிதபாவனா' என்ற சரண வரிகளில் ஸ்வரக் கற்பனைகளைப் பாடியது பொருத்தம்.மெதுவாகத் தவழ்ந்து வந்த ப்ரோவவம்மா என்ற சியாமா சாஸ்திரியின் மாஞ்சி ராகக் கீர்த்தனை, விரைவாகவே போய்க் கொண்டிருந்த நிகழ்ச்சியில் தேவையான சிறிய இடைவெளியைக் கொடுத்தது.'நீவே அனாதரண ஜேசிதே' என்ற அனுபல்லவி வரியில், மாஞ்சி ராகத்தைத் தெளிவாகக் காட்டியது காயத்ரியின் திறமையை வெளிப்படுத்தியது. இதற்கேற்ற வகையில், பூங்குளம் சுப்ரமணியன் மிருதங்கத்தை மிருதுவாக வாசித்தது அழகு சேர்த்தது. சேர்த்து வைத்துத் தனி ஆவர்த்தனத்தில் அதிர்வலைகளைப் பரப்பினார். தியாகராஜரின் கீர்த்தனையாக, அன்றைய கச்சேரியில் டக்கா ராகத்தில் ராகா சசிவதனா வந்தது பாட்டை மிகைப்படுத்தவில்லை.

ஆலாபனையும், ஸ்வரமும் இல்லை.கச்சேரியின் பிற்பகுதியில், காயத்ரி தன் குரு சுகுணா புருஷோத்தமன் இயற்றிய பைரவி மாலாவை எடுத்துப் பாடினார். நடபைரவி, வசந்தபைரவி,ஆனந்தபைரவி, சாலகபைரவி, சிந்துபைரவி, ஆஹிர்பைரவி என்ற ராகங்களில் வரிகளை அமைத்த பாடல். ஒவ்வொரு ராகத்தின் முடிவிலும் பைரவியின் ஒரு கீற்றைக் காண்பித்தது குறிப்பிடத்தக்கது. முடிவில், கல்கி அவர்களால், 'மீரா' திரைப்படத்திற்காக எழுதப்பட்ட மறவேனே எந்நாளிலுமே, பரஸ் ராக விறுவிறுப்பு. படத்தில் பாடியது எம்.எஸ்.பசுமையான நினைவுகளை, மீண்டும் மனதில் அசை போட வைத்தது. -எஸ்.சிவகுமார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X