பொது செய்தி

இந்தியா

பால் கொள்முதல் விலை அதிகரிக்க முடிவு

Added : ஜன 12, 2021
Share
Advertisement
பெங்களூரு; பொங்கல் பண்டிகைக்கு பின், லிட்டர் பாலுக்கு, ஒரு ரூபாய் கொள்முதல் விலையை அதிகரிக்க, 'பமூல்' ஆலோசிக்கிறது.கர்நாடகாவில், கொரோனா பரவாமல் தடுக்க, ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாலும், பால் உற்பத்தி அதிகரித்ததாலும், பமூல் எனும் பெங்களூரு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் பால், விற்பனையாகாமல் தேங்கியது. இவ்வேளையில், தினமும், 17 முதல், 18 லட்சம் லிட்டர் பால்

பெங்களூரு; பொங்கல் பண்டிகைக்கு பின், லிட்டர் பாலுக்கு, ஒரு ரூபாய் கொள்முதல் விலையை அதிகரிக்க, 'பமூல்' ஆலோசிக்கிறது.கர்நாடகாவில், கொரோனா பரவாமல் தடுக்க, ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாலும், பால் உற்பத்தி அதிகரித்ததாலும், பமூல் எனும் பெங்களூரு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் பால், விற்பனையாகாமல் தேங்கியது. இவ்வேளையில், தினமும், 17 முதல், 18 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியானது.பால் கொள் முதல் விலையில், ஒரு ரூபாய் குறைக்கப்பட்டது. தற்போது, பால் விற்பனை அதிகரித்துள்ளது. பால் உற்பத்தியும், 16 முதல், 16.50 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது.எனவே, 1 லிட்டர் பாலுக்கு, ஒரு ரூபாய் கொள்முதல் விலையை அதிகரிக்க, பமூல் ஆலோசிக்கிறது.இதனால், பமூல் எல்லைக்குட்பட்ட, பெங்களூரு நகர், பெங்களூரு ரூரல், ராம் நகர் மாவட்டங்களின், 12 தாலுகாக்களின், 1.20 லட்சத்துக்கும் அதிகமான, பால் உற்பத்தியாளர்கள் பயனடைவர்.தற்போது பால் உற்பத்தியாளர்களுக்கு, லிட்டருக்கு, 25.30 ரூபாய் வழங்குகிறது. பொங்கல் பண்டிகைக்கு பின், 26.40 ரூபாய் கிடைக்கும்.பமூல் தலைவர் நரசிம்ம மூர்த்தி கூறியதாவது:மார்க்கெட்டில், கிலோ பால் பொடி விலை, 215 முதல், 220 ரூபாய் வரை உள்ளது.மாதந்தோறும் சராசரியாக, 1,000 டன் பால் பொடி விற்பனையாகிறது. நந்தினி வெண்ணெய், 290 ரூபாயாக உள்ளது. விற்பனை திருப்திகரமாக உள்ளது.ஊரடங்கால், சரிந்திருந்த பால், வெண்ணெய், நெய் உட்பட, நந்தினி உற்பத்தி பொருட்களின் விற்பனையில், முன்னேற்றம் காணப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X