பெங்களூரு; கொரோனா கழிவு உற்பத்தியில், நாட்டிலேயே கர்நாடகா, எட்டாம் இடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில், 2,026 டன் கொரோனா கழிவு உற்பத்தியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று தடுப்பூசி, கொரோனா பணியாளர்களுக்கு செலுத்த, அனைத்து ஏற்பாடுகளும் நடந்துள்ளது. அந்தந்த மாநிலங்களில், ஏழு மாதத்தில், எவ்வளவு கொரோனா கழிவு உற்பத்தியானது என, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஆய்வு செய்தது.மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின், புள்ளி விபரங்களின்படி, நாட்டில், மொத்தம், 32 ஆயிரத்து, 994 கொரோனா கழிவு உற்பத்தியானது. இதில், கர்நாடகா, எட்டாவது இடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில், 2,026 டன் கொரோனா கழிவு உற்பத்தியானது.இவற்றில், முக கவசங்கள், தனிப்பட்ட பாதுகாப்பு உடை, ஷூ கவர்கள், கையுறைகள், மனித உடலுறுப்புகள், பிளாஸ்டர்கள், மெத்தைகள், சிரிஞ்சுகள் உட்பட, மற்ற மருத்துவ கழிவுகள் அடங்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE