''பா.ஜ., அரசு அமைய, நான் தான் முக்கிய காரணம்: நாகேஷ்

Added : ஜன 12, 2021
Share
Advertisement
பெங்களூரு; ''பா.ஜ., அரசு அமைய, நான் தான் முக்கிய காரணம். என்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் தைரியம் யாருக்கு உள்ளது,'' என, கலால் துறை அமைச்சர் நாகேஷ், கேள்வி எழுப்பியுள்ளார்.கலால் துறை அமைச்சர் நாகேஷ், முல்பாகல் தொகுதியின் சுயேச்சை எம்.எல்.ஏ., இவர், கடந்த கூட்டணி ஆட்சியிலும் அமைச்சராக பதவி வகித்தார்.சுயேச்சை என்பதால், கூட்டணி ஆட்சிக்கு தெரிவித்த ஆதரவை திரும்ப

பெங்களூரு; ''பா.ஜ., அரசு அமைய, நான் தான் முக்கிய காரணம். என்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் தைரியம் யாருக்கு உள்ளது,'' என, கலால் துறை அமைச்சர் நாகேஷ், கேள்வி எழுப்பியுள்ளார்.கலால் துறை அமைச்சர் நாகேஷ், முல்பாகல் தொகுதியின் சுயேச்சை எம்.எல்.ஏ., இவர், கடந்த கூட்டணி ஆட்சியிலும் அமைச்சராக பதவி வகித்தார்.சுயேச்சை என்பதால், கூட்டணி ஆட்சிக்கு தெரிவித்த ஆதரவை திரும்ப பெற்று, பா.ஜ.,வுக்கு ஆதரவளித்தார், பா.ஜ., அரசிலும், மீண்டும் அமைச்சராக்கப்பட்டார்.தற்போது, அவர் தன் துறையில், பாராட்டும் அளவுக்கு எந்தவிதமான அபிவிருத்தி பணியும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், அவரது அமைச்சர் பதவி பறிக்கலாம் என பேசப்படுகிறது.இது குறித்து, பெங்களூரு விகாஸ் சவுதாவில், அமைச்சர் நாகேஷ், நேற்று, கூறியதாவது:கூட்டணி ஆட்சியில், அமைச்சராக இருந்த போதே, ராஜினாமா செய்து வந்தேன். அப்போது, பலவிதமாக பேசப்பட்டது. ஆனாலும், ராஜினாமா செய்தேன். என்னை போன்று யார் செய்வர்.பா.ஜ., அரசு அமைய, நான் தான் முக்கிய காரணம். திருப்பு முனையை ஏற்படுத்தியதே நான் தான். எந்த காரணத்துக்கும், முதல்வர் எடியூரப்பா, என்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது.அவர் கொடுத்த வாக்கை, என்றும் மீறியதில்லை. என்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் தைரியம் யாருக்கு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இவரது பேச்சு, அரசு வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X