சி.கே.அச்சுகட்டு: இளம்பெண்ணை காதலிப்பதாக நாடகமாடி, பாலியல் பலாத்காரம் செய்து, மதமாற்றம் செய்யும்படி கட்டாயப்படுத்தியவர், போலீஸ் விசாரணை நடத்தியதால் தலைமறைவானார். அவரது சகோதரர் கைது செய்யப்பட்டார்.தட்சிண கன்னடாவை சேர்ந்த, ஷபிர் அகமது, 35, முகமது ரில்வான், 30, பெங்களூரின், பிரிகேட் சாலையில், ஓட்டல் நடத்துகின்றனர். ஷபிர் அவ்வப்போது, அழகு நிலையத்திற்கு செல்வார்.அங்கு பணியாற்றிய, 19 வயது இளம் பெண்ணை அறிமுகம் செய்து கொண்டார். இப்பெண்ணை, தன் ஓட்டலில் வரவேற்பாளராக, பணியில் அமர்த்தினார்.இளம் பெண்ணை காதலிப்பதாக நாடகமாடிய ஷபிர், ஓட்டல் ஒன்றுக்கு, அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.இவ்விஷயத்தை யாரிடமாவது கூறினால், பணியிலிருந்து நீக்குவதாகவும், ஆசிட் வீசுவதாகவும் மிரட்டினார். இதனால் அப்பெண், யாரிடமும் கூறவில்லை.இதற்கிடையில், ஷபிரின் தம்பி முகமது ரில்வான், அதே பெண்ணுடன் நெருக்கமாகி, 'என் அண்ணன் உனக்கு அநியாயம் செய்துள்ளான். இனி அப்படி நடக்காது' என கூறி, அப்பெண்ணிடம் கூறினார்.திருமணம் செய்து கொள்வதாக நாடகமாடி, பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். பெண்ணின் குடும்பத்தினரிடம் பேசிய ரில்வான், திருமண ஏற்பாடு செய்யும்படி கூறினார்.அதன்படி, 2021, ஜன., 21ல் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதன் பின் துபாய்க்கு சென்றால், நல்ல வேலை கிடைக்கும். பாஸ்போர்ட் எடுக்க, கையெழுத்து வேண்டுமென கூறி, வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கினார். பெண்ணின் குடும்பத்தினரிடம், 1.50 லட்சம் ரூபாய் வாங்கினார்.சில நாட்களுக்கு பின், 'நீ மதம் மாற வேண்டும்' என கட்டாயப்படுத்தி, பெண்ணின் நெற்றியிலிருந்து, குங்குமத்தை அழித்தார்.பாதிக்கப்பட்ட பெண், சி.கே.அச்சுகட்டு காவல் நிலையத்தில், புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார், ஷபிரை கைது செய்தனர். தலைமறைவான, அவரது தம்பி, ரில்வானை தேடுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE