கொரோனா தடுப்பூசி 2வது டோஸ் போட்டுக்கொண்ட ஜோ பைடன்

Updated : ஜன 12, 2021 | Added : ஜன 12, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
வாஷிங்டன்: பைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை, அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் போட்டுக் கொண்டார்.உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளிலும், அதிக உயிரிழப்புக்கொண்ட நாடுகளிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதிலும், பரவல் அதிகமானது. இதற்கிடையே கொரோனா
Joe Biden, Second Dose, COVID19 Vaccine

வாஷிங்டன்: பைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை, அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் போட்டுக் கொண்டார்.

உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளிலும், அதிக உயிரிழப்புக்கொண்ட நாடுகளிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதிலும், பரவல் அதிகமானது. இதற்கிடையே கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்து கண்டறியப்பட்டது அந்நாட்டு மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது.

சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டார். விரைவில் பதவி ஏற்க உள்ள அவர், பதவியேற்றதும் முதல் 100 நாளில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என தெரிவித்தார்.


latest tamil news



இதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கொரோனா தடுப்பூசியான பைசர் மருந்தின் முதல் டோஸை, நேரலையில் மருத்துவமனை ஒன்றில் போட்டுக்கொண்டார். இந்நிலையில், தற்போது 2வது டோஸை, அவர் செலுத்திக் கொண்டுள்ளார். 'மக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்க செய்வது தான் தனது முக்கிய பணி' என தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
12-ஜன-202121:14:09 IST Report Abuse
Kalaiselvan Periasamy உண்மையில் கொன்றன தடுப்பு ஊசியா அல்லது கண் துடைப்பு ஊசியா ?
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜன-202114:52:37 IST Report Abuse
தமிழவேல் மோடிஜி, தனது ஊசியை இன்னொருவருக்கு மனிதாபிமான முறையில் விட்டுக்கொடுத்து விட்டார்.
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
12-ஜன-202115:39:45 IST Report Abuse
கொக்கி குமாரு திருட்டு திமுகவில் தலைவர் பதவியை மனிதாபிமான முறையில் சுடலை குடும்பத்தை தவிர வேறு யாருக்காவது விட்டு கொடுப்பார்களா?...
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜன-202119:50:33 IST Report Abuse
தமிழவேல் இரண்டுமே அத்தைக்கு மீசை முளைக்கிர கதை.....
Rate this:
Cancel
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
12-ஜன-202111:08:43 IST Report Abuse
Shaikh Miyakkhan அமெரிக்கா அதிபருக்கு என் வாழ்த்துக்கள் .நீங்கள் எல்லாம் செய்து காட்டுவீர்கள் ஆனால் நாங்கள் எல்லாம் வாயால் தான் வடை சுடுவோம் தெரியுமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X