பெங்களூரு; ஆந்திராவில் ஹிந்துக்களுக்கு எதிராக நடந்து வரும் அடக்குமுறை குறித்து, உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமிகளுடன், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், தீவிர ஆலோசனை நடத்தினார்.பெங்களூரு, பசவனகுடியிலுள்ள பூர்ணபிரக்ஞா வித்யா பீடத்தில், உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகளின் பிருந்தாவனத்தில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், நேற்று மலர் துாவி வணங்கினார்.வித்யாபீடத்தின் மாணவர்கள், ஸ்ரீராமர் வேடம் அணிந்து வரவேற்றனர்.இதன் பின், தற்போதைய பெஜாவர் மடாதிபதி விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமிகளிடம் ஆசிர்வாதம் பெற்றார்.உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோவில் நிதி சேகரிப்பு; ஆந்திராவில் ஹிந்துக்களுக்கு எதிராக நடந்து வரும் அடக்குமுறை குறித்து, இருவரும் நீண்ட நேரம் ஆலோசித்தனர்.இதே வேளையில், ஆந்திராவில் ஹிந்துகளுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களை, ஆர்.எஸ்.எஸ்., கட்டுக்குள் கொண்டு வருமென மோகன் பாகவத் உறுதியளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE