பெங்களூரு; வரலாற்று பிரசித்தி பெற்ற, கே.ஆர்.மார்க்கெட், ஓராண்டுக்குள், புதிய வடிவில் உருமாறும். இதற்கான திட்டங்களை, பெங்களூரு மாநகராட்சி வகுத்துள்ளது.பெங்களூரின், கே.ஆர்.மார்க்கெட், வரலாற்று பிரசித்தி பெற்றது. நகரின் பாரம்பரியமிக்க கட்டடங்களில், ஒன்று. 14 ஏக்கர் பரப்புள்ள மார்க்கெட்டில், பழங்கள், காய்கறிகள், இறைச்சி உட்பட அனைத்து பொருட்கள் விற்கப்படுகிறது.இந்த மார்க்கெட்டை நம்பி, ஆயிரக்கணக்கானோர், வாழ்க்கை நடத்துகின்றனர். கட்டடத்தின் கீழ்தளத்தில், வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளது. இந்த இடம், குப்பை தொட்டியாக மாறியுள்ளது. மாட்டுக்கொட்டகை போன்று தென்படுகிறது.மார்க்கெட்டை புதிய வடிவில், அபிவிருத்தி செய்ய மாநகராட்சி திட்டம் வகுத்துள்ளது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், அதிநவீனமாக்கப்படும். வெவ்வேறு மால்களுக்கு சமமாக, 'பார்க்கிங்' இடம் அமைக்கப்படும்.சிக்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து, மார்க்கெட்டுக்கு, நடைபாதை அமையும். இதனால் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து, பயணியர் வருவதற்கு உதவியாக இருக்கும். இது போன்று, பல பணிகள் நடக்கும்.மாநகராட்சி நிர்வாக அதிகாரி கவுரவ் குப்தா, கே.ஆர்.மார்க்கெட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை, நேற்று பார்வையிட்டார்.அவர் கூறுகையில், 'நகரின் முக்கிய இடமான கே.ஆர்.மார்க்கெட்டுக்கு, ஏராளமானோர் வருகின்றனர். அவர்களுக்கு, அடிப்படை வசதிகள் ஏற்படுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அடுத்த ஓராண்டுக்குள், பணிகள் முடிவடையும்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE