பொது செய்தி

இந்தியா

கல்லூரிகள், பள்ளிகள் வரும் 15ல் துவக்கம்: அரசு முடிவு

Added : ஜன 12, 2021
Share
Advertisement
பெங்களூரு; கொரோனாவால் மூடப்பட்டிருந்த அனைத்து விதமான கல்லுாரி வகுப்புகள், ஹாஸ்டல்கள், வரும், 15 முதல் துவக்குவதற்கு, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. சுகாதார துறை விதிமுறைகளை கடைப்பிடித்தால், தொற்று பரவலை கட்டுப்படுத்தலாம் என, பெற்றோருக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டிருந்தன. இதற்கிடையில், முதுகலை, இளங்கலை,
கல்லூரிகள், பள்ளிகள் வரும் 15ல் துவக்கம்: அரசு முடிவு

பெங்களூரு; கொரோனாவால் மூடப்பட்டிருந்த அனைத்து விதமான கல்லுாரி வகுப்புகள், ஹாஸ்டல்கள், வரும், 15 முதல் துவக்குவதற்கு, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

சுகாதார துறை விதிமுறைகளை கடைப்பிடித்தால், தொற்று பரவலை கட்டுப்படுத்தலாம் என, பெற்றோருக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டிருந்தன. இதற்கிடையில், முதுகலை, இளங்கலை, பொறியியல், டிப்ளமா ஆகிய கல்லுாரிகளின் இறுதி ஆண்டு வகுப்புகள், கடந்தாண்டு, நவ., 17ல் துவங்கின.அடையாள குறியீடுஇது போன்று, கடந்த டிச., 1 முதல், மருத்துவம் மற்றும் செவிலியர் கல்லுாரிகளும் திறக்கப்பட்டன. தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால், எஸ்.எஸ்.எல்.சி., - பி.யு.சி., இரண்டாம் ஆண்டு வகுப்புகளும், 1 முதல் இயங்கி வருகின்றன.ஆனால், தொற்று பரவல் காரணமாக, பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அனுப்ப அச்சப்படுகின்றனர். அரசு போதுமான முன்னெச்சரிக்கை எடுத்துள்ளதால், பிள்ளைகளை தைரியமாக பள்ளி, கல்லுாரிகளுக்கு அனுப்பும்படி, முதல்வர் எடியூரப்பாவும், தொடக்க கல்வி துறை அமைச்சர் சுரேஷ் குமார் ஆகியோரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கல்வி துறை உயர் அதிகாரிகளுடன் துணை முதல்வர் அஸ்வத் நாராயணா, பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று ஆலோசனை நடத்தினார்.பின், அவர் கூறியதாவது:முதுகலை, இளங்கலை, பொறியியல், டிப்ளமா ஆகிய கல்லுாரிகளின் அனைத்து வகுப்புகளும், வரும், 15 முதல் நடத்தப்படும். மாணவர்கள் விருப்பப்படி தான் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அவர்களுக்கான ஹாஸ்டல்களும் திறக்கப்படும். பழைய பஸ் பாஸ்கள் மூலம், பஸ்களில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய பாஸ்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதார துறை விதிமுறைகள் படி, கல்லுாரிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படும்.மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோரின் உடல் வெப்பநிலையை தினமும் பரிசோதிக்க வேண்டும். ஆறு சமூக விலகல் குறிப்பிடும் வகையில், அடையாள குறியீடுகள் வரைய வேண்டும்.அறிவிப்புசாரணர் இயக்கம், ஸ்கவுட்ஸ் அண்டு கைட்ஸ் ஆகிய பயிற்சிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஹாஸ்டல்கள் திறக்க அனுமதிஅளிக்கப்பட்டுள்ளன. இதனால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய புதிய விதிமுறைகளை, சமூக நலத்துறை விரைவில் அறிவிக்கும்.உணவகம், நுாலகம் திறக்கவும், விளையாட்டு போட்டிகள் நடத்தவும் தனி விதிமுறை தயாரிக்கப்பட்டுள்ளன. வழக்கம் போல் தேர்வுகள் நடத்துவது குறித்து, அனைத்து பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.விதிமுறை கடைப்பிடித்தால் போதும்!எஸ்.எஸ்.எல்.சி., - பி.யு.சி., இரண்டாண்டு வகுப்புகள் நடத்திய சில ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால், பெற்றோர் பயப்படுகின்றனர். ஆனால், முக கவசம் அணிந்து, சமூக விலகல் கடைப்பிடித்து, கிருமி நாசினி மருந்து மூலம் கைகளை சுத்தப்படுத்தி கொள்ளும்பட்சத்தில் தொற்று பரவலை தடுக்கலாம் என, சுகாதார துறை வலியுறுத்தியுள்ளது. சுகாதார துறை தெரிவித்துள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடித்தால், தொற்றிலிருந்து தப்பிக்கலாம் என, அரசு கூறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X