தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் அல்ல: சுகாதாரத்துறை செயலர்

Updated : ஜன 12, 2021 | Added : ஜன 12, 2021 | கருத்துகள் (22) | |
Advertisement
சென்னை: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் அல்ல எனவும், தாங்களாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி போடப்படும் என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து 5.56 லட்சம் டோஸ்கள் கொண்ட சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்துகள் தமிழகத்திற்கு வரவுள்ளது. வரும் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி
CovidVaccine, Covaxin, Covishield, Radhakrishnan, கொரோனா, தடுப்பூசி, கோவிஷீல்டு, கோவாக்சின், ராதாகிருஷ்ணன்

சென்னை: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் அல்ல எனவும், தாங்களாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி போடப்படும் என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து 5.56 லட்சம் டோஸ்கள் கொண்ட சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்துகள் தமிழகத்திற்கு வரவுள்ளது. வரும் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்கட்டமாக சீரம் நிறுவனத்தின் 5,56,500 கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளும், பாரத் பயோடெக்கின் 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பு மருந்துகளும் தமிழகம் வரவுள்ளது. ஒருவருக்கு 30 நாள் இடைவெளியில் 2 முறை தடுப்பூசி போடப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும்.


latest tamil news


கோவிஷீல்டு, கோவாக்சினை யார் யாருக்கு எந்த தடுப்பூசிகளை போடுவது என்பது பற்றி இதுவரை முடிவு செய்யவில்லை. தடுப்பூசி தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி வருகிறது. புனேயில் இருந்து காலை 10:30 மணிக்கு கொரோனா தடுப்பு மருந்து சென்னை விமான நிலையம் வருகிறது. அங்கிருந்து 10 மையங்களுக்கு அனுப்பப்படும். தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் அல்ல, தாங்களாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி போடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
12-ஜன-202123:10:59 IST Report Abuse
Ramesh Sargam கொரோனா வந்து ஒரு வருடமாகிறது. வந்ததிலிருந்தே இதை எதிர்க்க மருந்து இல்லையா, தடுப்பூசி இல்லையா என்று எதிர்பார்த்து, எதிர்பார்த்து, ஒருவழியாக இப்பொழுது தடுப்பூசி வந்த இந்த நேரத்தில், அதை போட்டுக்கொள்வது கட்டாயம் இல்லை என்று இவர் கூறுவது சரியா? கட்டாயம் இல்லை என்று கேட்பதட்கா நாம் இவ்வளவு மாதங்கள் காத்துக்கொண்டிருந்தோம்.
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
12-ஜன-202118:20:03 IST Report Abuse
Sanny வெளிநாடுகளுக்கு போகும்போது அங்கே விமான நிலையத்தால் இருந்து போக அனுமதி கிடைக்குமா?
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
12-ஜன-202116:34:49 IST Report Abuse
S. Narayanan Corona injuction will save people.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X