வில்மிங்டன்: அமெரிக்காவில், வரும், 20ம் தேதி, நாட்டின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்க உள்ள கமலா ஹாரிசை கவுரவிக்கும் விதமாக, அடுத்த மாத பதிப்பில், 'வோக்' பத்திரிகையின் அட்டையில், அவரின் படம் அச்சிடப்பட்டுள்ளது.அந்த படங்கள், நேற்று வெளிடப்பட்டன. இந்நிலையில், சாதாரண உடையுடன், காலில் 'ஸ்னீக்கர்' ரக ஷூ அணிந்தபடி இருக்கும் ஹாரிசின் படத்தை, அட்டையில் அச்சிட்டதற்கு, ஹாரிஸ் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இள நீல நிற, 'சூட்' அணிந்தவாறு எடுத்த புகைப்படத்தை, அட்டை பக்கத்தில் அச்சிடவே, ஹாரிஸ் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE