வரும் 18ம் தேதி பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி: தொகுதி ஒதுக்கீடு இறுதியாக வாய்ப்பு?

Updated : ஜன 13, 2021 | Added : ஜன 12, 2021 | கருத்துகள் (118) | |
Advertisement
புதுடில்லி: முதல்வர் பழனிசாமி, வரும் 18 ம் தேதி டில்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். அப்போது பா.ஜ., - அ.தி.மு.க., இடையே தொகுதி ஒதுக்கீடு இறுதியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.தமிழகத்தில், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பா.ஜ., -பா.ம.க., - தே.மு.தி.க.,- த.மா.கா., மற்றும்- புதிய நீதிக்கட்சி இடம் பெற்றன. கடந்த 2020 நவம்பரில், சென்னையில், மத்திய உள்துறை அமைச்சர்
முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடி,  மோடி, நரேந்திர மோடி, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் இபிஎஸ், அதிமுக, அ.தி.மு.க., பாஜ, அதிமுக, பா.ஜ.,

புதுடில்லி: முதல்வர் பழனிசாமி, வரும் 18 ம் தேதி டில்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். அப்போது பா.ஜ., - அ.தி.மு.க., இடையே தொகுதி ஒதுக்கீடு இறுதியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பா.ஜ., -பா.ம.க., - தே.மு.தி.க.,- த.மா.கா., மற்றும்- புதிய நீதிக்கட்சி இடம் பெற்றன. கடந்த 2020 நவம்பரில், சென்னையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற விழாவில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டணியை உறுதி செய்தனர். முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு நேற்று தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர், சி.டி.ரவி முற்றுப்புள்ளி வைத்தார்.


latest tamil news
இந்நிலையில், வரும் 18 ம் தேதி முதல்வர் பழனிசாமி, டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து, ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார். அரசியல் ரீதியாக, அதிமுக - பா.ஜ., கூட்டணியை உறுதி செய்வதுடன், தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்யவும் இந்த சந்திப்பு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 14ம் தேதி சென்னை வரும் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, 6 மணி நேரம் மட்டுமே இங்கு உள்ளார். அப்போது துக்ளக் விழாவில் பங்கேற்கும் அவர், பின்னர் தமிழக பா.ஜ., நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார்.

அ.தி.மு.க., ஒன்றுபட்டு இருப்பதையே பா.ஜ., தலைவர்கள் விரும்புகின்றனர். பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தை, தினகரன் ஏற்று கொண்டால், இரு கட்சிகளை இணைப்பதுடன், திமுக.,விற்கு எதிராக வலிமையான கூட்டணியை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் பிப்., முதல் வாரத்திற்கு பிறகு தான், தமிழக அரசியல் நிலவரத்தில் தெளிவான சூழ்நிலை தெரிய வரும் என பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (118)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Trichy,இந்தியா
13-ஜன-202105:43:13 IST Report Abuse
Raj இங்க யார்வந்து, என்ன பேர்ல வந்து, அதிமுகவுக்கு எதிரா கூவுனாலும் சரி, மக்கள் அராஜக ரௌடி திமுகவை, ஹிந்து துரோக நாத்திக திமுகவை, மதக்கலவர தூண்டி திமுகவை மொத்தமாக துடைப்பதற்கு தயாராக உள்ளனர். மக்கள் கருணாநிதியோட கடைசி காலத்துல கொஞ்சம் கொஞ்சமா யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. பகுத்தறிவை தவறாக பயன்படுத்தி அதன் அர்த்தத்தையே மாத்தின சுயஒழுக்கமற்ற திமுகவை இந்த தேர்தலுடன் தமிழ்நாட்டில் பல் பிடுங்கப்பட்ட பச்சை பாம்பாக தூக்கி எரிய மக்கள் முடிவுசெய்து விட்டனர். அட்வான்சுடு குட்பை திமுக.
Rate this:
arudra1951 - Madurai,இந்தியா
13-ஜன-202108:55:04 IST Report Abuse
arudra1951யாரும் எந்த கட்சியும் இந்த தமிழ் நாட்டை ஆளட்டும் ஆனால் திமு க என்று தீய சக்தி இனிமேல் தலை தூக்க கூடாது...
Rate this:
Cancel
Anbu - Kolkata,இந்தியா
12-ஜன-202123:15:23 IST Report Abuse
Anbu கட்டுமரம் மறைந்து இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டாலும் அதற்கு முன்பும் சுமார் எட்டு வருடங்களாகவே அவர் தீவிர அரசியலில் இருந்து ஆப்செண்ட்தான் ...... இயங்கினாரோ அல்லது இயக்கப்பட்டாரோ சுடலைதான் திமுக சார்பில் இருந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டார் ...... செல்வியின் மறைவுக்குப் பிறகு அதிமுகவையே விலைக்கு வாங்கும் அளவுக்கு பணம், வசதி, அதிகாரம், செல்வாக்கு அனைத்தும் இருக்கத்தான் செய்தது திமுகவிடம் ...... (அதிமுகவையே வாங்க எண்ணினாலும்) தடுக்க நினைத்த பாஜகவையும் வாயடைக்கச் செய்யும் அளவுக்கு மேற்கூறிய நான்கும் இருந்தன திமுகவிடம் ...... போதாததற்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் வேறு ........ அந்த விஷயத்தில் கோட்டை விட்டார் சுடலை ....... அதன் பிறகும் பல விஷயங்களில் கோட்டை விட்டார் சுடலை (சூதானமாகப் புரிந்து கொள்ளுங்கள்) ......... வேறு வழியின்றி தீம்கா தவிர வேறு எதையும் நினைச்சதில்லீங்கோ என்ற விசுவாசத்தால் கட்டுண்டிருக்கிறார்கள் திமுகவினர் ....... சரிப்பட்டு வரமாட்டார் என்கிற உண்மையை துணை முதல்வர் ஆனபிறகும் கூட கட்சியை வழித்துப் போட்டுக்கொள்வது தெரியவில்லையே என்று அப்போதே உணர்ந்திருப்பார்கள் ........ இன்று வரை சுடலையால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்பதைத்தான் உண்மை (ஊழல் குற்றச்சாட்டுக்களைத் தவிர) ........ கவர்னரிடம் புகார் கொடுக்கும்வரை பேசாமல் இருந்துவிட்டு, கொடுக்கப்பட்ட புகாரிலேயே முகாந்திரம் இல்லாமல் கவர்னர் மாளிகை வரை சென்று புகார் கொடுத்துள்ளனர் என்று போட்டுடைக்கிறார் பழனி ...... அதிமுகவை அழிக்க (குறைந்த பட்சம் நாறடிக்க) சுடலை உட்பட இவர்கள் அனைவரின் கடைசி நம்பிக்கை சசிகலா நடராஜன் ......... வலது காலை முதலில் பரப்பன அக்ராஹாரா வுக்கு வெளியே எடுத்து வைக்கவேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கின்றனர் கட்டுமரத்தின் நிரந்தர அடிமைகள் .......
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
12-ஜன-202123:08:52 IST Report Abuse
Allah Daniel என்ன கூட்டணி அமைச்சாலும், எங்க பாஸ் ‘சைக்கோ’ இருக்கிற கூட்டணிதான் ஜெயிக்கபோகுது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X