வங்கியில் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்யுமாறு கோர சட்டத்தில் வழியுள்ளதா
அரசின் உத்தரவு, ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி வங்கிகள் கல்விக் கடன் வழங்குகின்றன. 'கல்விக் கடன் தள்ளுபடி' என அரசு அறிவிக்காதவரை உங்களுக்கு எந்த சலுகையும் இல்லை. சட்டத்திலும் வழிவகை இல்லை. கடனை செலுத்தி வங்கியின் கடும் சட்ட நடவடிக்கையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும்.
கொரோனா ஊரடங்கு காரணத்தால் பங்கு நிறுவனத்தை எங்களால் தொடர்ந்து நடத்த முடியவில்லை. லாப, நஷ்ட கணக்கை எங்களால் ஏற்க முடியவில்லை. நீதிமன்றம் மூலம் தீர்வு காண வழியுண்டா
விசாரணை நீதிமன்றத்திற்கு இணையான அங்கீகாரம் பெற்ற நடுவர் தீர்ப்பாயங்கள் பல இயங்கி வருகின்றன. உங்கள் சட்ட ஆலோசகரிடம் விவாதித்து, தீர்ப்பாயத்தில் மனு செய்து நிவாரணம் பெறலாம். வணிக ரீதியான பிரச்னைகளில் வழக்கிற்கு முன் தீர்வு காண வழி செய்யப்பட்டுள்ளது. உரிய வழிகாட்டுதலின் பேரில் அதிக பொருட்செலவில்லாமல் உடனடியாக தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
-வீ.எஸ்.கார்த்தி,
வழக்கறிஞர்,
0452--423 0666
மாலை 5:00-8:00 வரை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE