பொது செய்தி

தமிழ்நாடு

கிராம காவலர் நியமனம்: மக்களுக்கு அறிமுகம்

Added : ஜன 12, 2021
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட, நல்லூர் கிராமத்தில், கிராம கண்காணிப்பு காவலர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. போலீஸ்-பொதுமக்கள் மத்தியில், நல்லுறவு ஏற்பட கிராம காவலர் திட்டம், ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி புன்செய்புளியம்பட்டியை அடுத்த, நல்லூர் கிராமத்துக்கு, முத்துமாணிக்கம் என்பவர் கிராம

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட, நல்லூர் கிராமத்தில், கிராம கண்காணிப்பு காவலர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. போலீஸ்-பொதுமக்கள் மத்தியில், நல்லுறவு ஏற்பட கிராம காவலர் திட்டம், ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி புன்செய்புளியம்பட்டியை அடுத்த, நல்லூர் கிராமத்துக்கு, முத்துமாணிக்கம் என்பவர் கிராம கண்காணிப்பு காவலராக நியமிக்கப்பட்டுள்ளார். நல்லூர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று நடந்த நிகழ்ச்சியில் சத்தி டி.எஸ்.பி., சுப்பையா, கிராம கண்காணிப்பு காவலரை, மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தினார். அவர் பேசும்போது, ''கிராம கண்காணிப்பு காவலருக்கு, மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கிராமத்தில் நடக்கும் குற்றச்செயல்கள் குறித்து, அவரிடம் தகவல் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X