ஈரோடு: கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில், ஈரோட்டில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் நல்லசாமி தலைமை வகித்தார். பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து நல்லசாமி கூறியதாவது: கீழ்பவானி வாய்க்காலில், 2,300 கனஅடி நீர் திறக்கப்பட்டு, இரண்டு லட்சத்து, 7,000 ஏக்கரில், ஒரு நேரத்தில், ஒரு லட்சத்து, 3,500 ஏக்கர் மட்டுமே பாசனம் பெறும். மற்றொரு பகுதி கசிவு நீர் மூலமே பாசனம் பெறும். கான்கிரீட் தளம் அமைத்தால், கசிவு நீரை நம்பிய பாசனம், குடிநீர், நிலத்தடி நீராதாரம் முற்றிலும் பாதிக்கும். எனவே திட்டத்தை கைவிட வேண்டும். திட்டத்தை கண்டித்து ஒவ்வொரு பகுதியாக போராட்டம் நடத்தப்படும். வரும் பிப்.,12ல் சென்னிமலை பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதை தீர்மானமாக நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி உள்ளோம். தமிழக முதல்வரிடமும் வழங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE