ஈரோடு: கீழ்பவானி முறைநீர் பாசனத்தில், கவுந்தப்பாடி, சலங்கபாளையம், பெரிய புலியூர், பெருமாபாளையம் பகுதிகளில், 1,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், கருப்பு கவுனி, பி.பி.டி., பவானி, இட்லி குண்டு, பொன்னி, ஐ.ஆர்.20 போன்ற நெல் ரகங்களை சாகுபடி செய்துள்ளனர். தற்போது நன்கு வளர்ந்து, அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்கிறது. வெயில் இல்லாமல், நீர் வடிந்தாலும், நிலம், பயிர் காயவில்லை. ஈரம் அதிகமாக உள்ளதால், ஆட்களை வைத்தும், இயந்திரம் மூலமும் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். இதேபோல் இரட்டை வாய்க்கால், செட்டிபாளையம், ஆலத்தூர், பாப்பாங்காட்டூர், அய்யம்பாளையம் பகுதியிலும், நெற்பயிர்கள் நீரில் மூழ்கி காணப்படுவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE