ஈரோடு: தமிழக விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், மாநில தலைவர் ரத்தினசாமி தலைமையில், ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் துளசிமணி, மாநகர மாவட்ட காங்., தலைவர் ரவி, தி.மு.க., சார்பில் வீரமணி, மார்க்., கம்யூ., மாவட்ட செயலாளர் ரகுராமன், தமிழக விவசாயிகள் சங்கம் சுப்பு, கீழ்பவானி முறைநீர் பாசன சபை தலைவர் காசியண்ணன், குமாரசாமி உட்பட பலர் பங்கேற்றனர். மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை இயற்றும் முன்பே, தமிழக அரசு ஒப்பந்த சாகுபடி சட்டம், கால்நடைகளை அழிக்கும் கால்நடை இனப்பெருக்க சட்டம் போன்ற பல்வேறு சட்டங்களை நிறைவேற்றினர். இவை அனைத்தும், விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் எதிரானது. இச்சட்டங்களை திரும்ப பெற வேண்டும். இச்சட்டங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி, வேளாண் விளை பொருளுக்கான விலை நிர்ணயம் போன்ற பல்வேறு செயல்பாடுகளை பாதிக்கும். எனவே, வேளாண் விரோத சட்டங்களை, மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE