அந்தியூர்: சென்னம்பட்டி வனத்தில், வயது முதிர்வால் ஆண் யானை இறந்து விட்டது. அந்தியூரை அடுத்த சென்னம்பட்டி வனம், எண்ணமங்கலம் காப்புக்காடு, கோவிலூர் பகுதியில் சென்னம்பட்டி வனத்துறையினர், நேற்று முன்தினம் இரவு ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு யானை இறந்து கிடப்பதை பார்த்தனர். மருத்துவ குழுவினர் உடற்கூறு சோதனை செய்தனர். இறந்து கிடந்தது, 60 வயதான ஆண் யானை என்றும், வயது முதிர்வால் இறந்ததாகவும் தெரிவித்தனர். யானை உடல் அதே இடத்தில் புதைக்கப்பட்டது. யானையின், 6 அடி நீள தந்தங்களை வெட்டி, வன அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE