இடைப்பாடி: முதல்வர் தொகுதியான, இடைப்பாடியில் ஸ்டாலின் நடத்த இருந்த மக்கள் கிராம சபை கூட்டம் மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
மக்கள் கிராம சபை கூட்டம், முதல்வரின் இடைப்பாடி தொகுதி, சூரப்பள்ளியில் கடந்த, 7ல் நடக்க இருந்தது. ஆனால் மழை காரணமாக, தி.மு.க., தலைமை தள்ளி வைத்தது. இந்நிலையில், அதே இடத்தில் கிராம சபை கூட்டம் நடத்த, நிலத்தின் உரிமையாளர் ஆறுமுகம் மறுத்துவிட்டதால், தற்போது இடைப்பாடி-சேலம் சாலையில், மின்வாரிய கோட்ட அலுவலகம் அருகே இடத்தை தேர்வு செய்து, மக்கள் அமரும் வகையில், பொக்லைன் இயந்திரம் மூலம் சமன்படுத்தும் பணியில், தி.மு.க.,வினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி வெளியிட்டுள்ள அறிக்கை:மாவட்ட, அவசர செயற்குழு கூட்டம், கொங்கணாபுரம் அடுத்த குரும்பபட்டி, ஆனந்த கவுண்டர் திருமண மண்டபத்தில் இன்று நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் கோபால் தலைமையில், காலை, 9:00 மணிக்கு கூட்டம் துவங்குகிறது. அதில், இடைப்பாடி தொகுதி, குரும்பபட்டி ஊராட்சியில், ஸ்டாலின் தலைமையில் நடக்கும் மக்கள் கிராமசபை கூட்டம். பொங்கல் திருவிழா மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE