புதுடில்லி: ஜனநாயகத்திற்கு ஆபத்தாக உள்ள வாரிசு அரசியல் என்னும் நோயை முற்றிலும் வேரறுக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தேசிய இளைஞர் பார்லிமென்ட் திருவிழா நிகழ்ச்சியில், வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் மோடி பேசியதாவது: பார்லிமென்டின் மைய மண்டபத்தில், தேசிய இளைஞர் பார்லி திருவிழா நடந்த இன்றைய நாள் மிகவும் முக்கியமானது. இதன் மூலம், நமது அரசியல்சாசனம் வரையறுக்கப்பட்டது. புதிய தேசத்தை கட்டமைக்கும் ஒரு முயற்சியாக புதிய கல்விக்கொள்கை உள்ளது. நமது இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் சூழலை நாங்கள் வழங்கியுள்ளோம். நமது அரசியலுக்கும் இளைஞர்கள் தேவை. நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த அரசியல் ஒரு வாய்ப்பாக உள்ளது.
நாட்டிற்கு சவாலாக இருக்கும் வாரிசு அரசியலானது, ஜனநாயகத்திற்கு ஆபத்தாக உள்ளது. அதனை முற்றிலும் வேரறுக்க வேண்டும். வாரிசு அரசியல்வாதிகளுக்கு, தேசம் என்றும் முதன்மையாக இருந்தது இல்லை. அவர்களுக்கு, குடும்பத்தினரே முக்கியம் தங்கள் குடும்ப பெயரின் அடிப்படையில் தேர்தலை எதிர்கொண்டவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. திறமைக்கும், நேர்மைக்கும் தற்போது மக்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். ஆனால், வாரிசு அரசியல் என்ற நோய் இன்னும் முற்றிலும் அழியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE