சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்தில் தொழிலாளி பலி

Added : ஜன 12, 2021
Share
Advertisement
ஓமலூர்: ஓமலூர், நாரணம்பாளையத்தை சேர்ந்த ஜோசப் மகன்கள் டேவிட்செல்லதுரை, 36, ஜெபாஸ்டின், 26. இருவரும் தச்சு தொழிலாளிகள். நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு தாரமங்கலத்தில் இருந்து, பஜாஜ் எம்.80 இருசக்கர வாகனத்தில், டேவிட்செல்லதுரை ஓட்டி வந்தார். ஜெபாஸ்டின் பின்னால் அமர்ந்து கொண்டு வந்தார். வாகனம் பழுதானதால், பல்பாக்கி பிரிவு ரோட்டில் பட்டறைக்கு கொண்டு செல்ல, சாலையை கடந்த

ஓமலூர்: ஓமலூர், நாரணம்பாளையத்தை சேர்ந்த ஜோசப் மகன்கள் டேவிட்செல்லதுரை, 36, ஜெபாஸ்டின், 26. இருவரும் தச்சு தொழிலாளிகள். நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு தாரமங்கலத்தில் இருந்து, பஜாஜ் எம்.80 இருசக்கர வாகனத்தில், டேவிட்செல்லதுரை ஓட்டி வந்தார். ஜெபாஸ்டின் பின்னால் அமர்ந்து கொண்டு வந்தார். வாகனம் பழுதானதால், பல்பாக்கி பிரிவு ரோட்டில் பட்டறைக்கு கொண்டு செல்ல, சாலையை கடந்த போது, தர்மபுரியிலிருந்து சேலம் நோக்கி வந்த டாடா ஏஸ் வாகனம் மோதியது. இதில், இருவரும் காயமடைந்தனர். மருத்துவமனை கொண்டு செல்லும் போது, டேவிட்செல்லதுரை உயிரிழந்தார். இறந்த டேவிட்செல்லதுரைக்கு, மனைவி ஜான்சிகிறிஸ்டினா, 30, இரண்டு மகன்கள் உள்ளனர். டாடா ஏஸ் வாகனத்தை, ஓமலூர் போலீசார் பறிமுதல் செய்து, தப்பியோடிய ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X